#image_title
இன்றைய உலகில் வினோதமான சம்பவங்கள் நடக்கிறது. அதேபோல் சாதனையாளர்களும் சாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஒரு சில செயல்கள் மீது ஆர்வம் இருக்கும். ஏதாவது ஒரு வகையில் சாதித்து வெளியில் தெரிய வேண்டும் கின்னஸில் அல்லது லிம்காவில் இடம்பெற வேண்டும் என்று விரும்பி செய்வர்.
அதேபோல ஆரம்கேவியில் 50,000 கலர் பட்டு சேலை அதிக எடை கொண்ட தங்க நகைகள் போன்று தமிழ்நாட்டில் கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்கள். அதேபோல ஒரு வித்தியாசமான வெள்ளி பொருளை செய்து சாதனை படைத்திருக்கிறார்கள் அதை பற்றி இனி காண்போம்.
சென்னையைச் சேர்ந்த சுக்ரா ஜுவல்லரி நிறுவனம் கின்னஸ் சாதனை புரிவதற்காக சுமார் 160 கிலோ எடையுடன் ரூபாய் மூன்றரை கோடி மதிப்பிலான வெள்ளியிலான பீரோவை தயாரித்திருக்கிறார்கள். இந்த பீரோவின் உயரம் 7 அடி அகலம் 3 அடி ஆகும். உலகிலேயே முதல்முறையாக வெள்ளியில் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய அலமாரி என்ற பிரிவின் கீழ் இதற்கு கின்னிஸ் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த வெள்ளி அலமாரியை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் துணைவியார் ஆன துர்கா ஸ்டாலின் திறந்து வைத்தார். மிகுந்த கைவினை வேலைப்பாடுகளுடன் இந்த அலமாரி ஜொலிக்கிறது. இதை பார்த்து வியந்து பாராட்டினார் துர்கா ஸ்டாலின். தற்போது இது பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்கப் பொருளாதாரத் தரவுகளின் அதிரடி மாற்றத்தால், சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை குதிரை வேகத்தில் எகிறத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் வெளியான…
தமிழகப் பள்ளி கல்வித்துறையில் பல்வேறு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, சுமார் 200 கோடி ரூபாய் வரை மோசடி…
தற்போது பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் கோடை வெயில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி, வரலாறு காணாத…
சமூக வலைத்தளமான 'X' தளத்தில் சுமன் ரஸ்தோகி என்பவரால் பகிரப்பட்ட அதிர்ச்சியூட்டும் லாரி விபத்து வீடியோ ஒன்று தற்போது இணையத்தில்…
ஐரோப்பிய நாடுகளில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள மக்கள் தங்களின் வீடுகளை…
டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி…