“எங்களுக்கு அப்புறம் யாருமே வரமாட்டாங்கன்னு சொன்னாங்களா?”…. துரைமுருகனின் நச் பதில்….. ஆடிப்போன தவெக….!

By Nanthini on ஆவணி 24, 2026

Spread the love

வேலூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழக வெற்றி பெற்ற கழகம் தொடர்பாக திமுக பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்த கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. எதிர்காலத்தில் திமுக சட்டசபைக்கே வராது என்றும், தேர்தலில் வெற்றி பெறவே முடியாது என்றும் தவெக நிர்வாகிகள் தெரிவித்த விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, துரைமுருகன் தனது பாணியில் சுவாரஸ்யமாகவும் அதிரடியாகவும் பதிலளித்துள்ளார்.

ஒவ்வொரு முறையும் ஆட்சியைப் பிடிப்பவர்கள், ‘எங்களுக்குப் பின்னால் யாரும் வர மாட்டார்கள்’ என்று சொல்வது அரசியல் களத்தில் வழக்கமான ஒன்றுதான் என்று கூறிய துரைமுருகன், எம்பிஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற தலைவர்கள் ஆட்சியில் இருந்தபோதும் இதையே குறிப்பிட்டதை சுட்டிக்காட்டினார். அத்தகைய பேச்சுகள் சட்டசபையில் அமர்ந்திருக்கும்போது பெருமையாகப் பேசிக் கொள்ளப்படுமே தவிர, அவை முதிர்ச்சியான அரசியல் ஞானத்தின் அடிப்படையில் சொல்லப்படுபவை அல்ல என்றார். கடந்த காலங்களில் இதுபோன்ற விமர்சனங்களை எதிர்கொண்டு தான் திமுக பலமுறை வெற்றி பெற்று வந்துள்ளது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

   

தவெக ஆட்சிக்கு வந்தால் எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கப்படும் என்ற அறிவிப்பு மற்றும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்துப் பேசிய அவர், கஜானா காலியாக இருக்கிறது என்று கூறிவிட்டு எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்குவது முரண்பாடாக உள்ளது என விமர்சித்தார். தற்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோரிடம் ஏற்கனவே கார்கள் இருக்கும் நிலையில், இந்த சலுகை அவசியமற்றது என்றார். அதேவேளையில், எம்.எல்.ஏ.க்களின் உதவியாளர்களுக்கு இணையான சம்பளத்தை தூய்மைப் பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முற்றிலும் நியாயமானது என்றும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

   

சட்டசபையில் புதிய கட்சிகளின் உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய துரைமுருகன், அவை மரபுகள் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். புதிய உறுப்பினர்களுக்கு சட்டமன்ற விதிகள் தொடர்பான புத்தகங்கள் வழங்கப்பட்டதா என்பது தெரியவில்லை எனக் குறிப்பிட்ட அவர், சபாநாயகர் நீண்ட அனுபவம் வாய்ந்தவர் என்பதால் அவையைச் சரியாக வழிநடத்திச் செல்வார் என்றும், அவையின் கண்ணியத்தைக் காக்க மரபுகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.