திமுகவில் திடீர் திருப்பம்… ஆ.ராசாவுக்கு உதயநிதி கிரீன் சிக்னல்… குறுக்கே நின்ற கனிமொழி… அறிவாலயத்தில் உச்சகட்ட பரபரப்பு….!

By Nanthini on ஆனி 7, 2026

Spread the love

திமுகவின் மூத்த தலைவரும், தற்போதைய பொதுச்செயலாளருமான துரைமுருகன் தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டோ அல்லது பிற காரணங்களாலோ அப்பொறுப்பில் இருந்து ஒதுங்கிக்கொள்ள முடிவு செய்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரவலான தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, காலியாகும் அந்த முக்கியப் பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சரும், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான ஆ.ராசாவை நியமிக்க ஆலோசனைகள் நடந்து வருவதாகவும், அவருக்குத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் முழு ஆதரவு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதே வேளையில், கட்சியின் சமநிலையைப் பேணும் வகையில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஒருவருக்கு இப்பொறுப்பை வழங்க வேண்டும் என கனிமொழி தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருவதாகத் தெரிகிறது. எனினும், உட்கட்சிப் பூசல்களையும் பிராந்தியச் சமன்பாடுகளையும் முன்னிறுத்திப் பல்வேறு விவாதங்கள் திரைமறைவில் நடந்து வரும் வேளையில், இது குறித்து திமுக தலைமைத் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.