வைகோவுக்கு ஸ்டாலின் கொடுத்த மரண அடி?…. மதிமுகவிலிருந்து மொத்தமாக தூக்கப்பட்ட 12 ‘EX’ தலைகள்… பின்னணியில் இருக்கும் ரகசியம்….!

By Nanthini on ஆனி 7, 2026

Spread the love

மதிமுகவின் மூத்த தலைவர்களான பொடா அழகு சுந்தரம், புலவர் செவந்தியப்பன் மற்றும் எஸ். துரைசாமி உள்ளிட்ட 12 முன்னாள் முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைவதற்கு அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தற்போது பச்சைக்கொடி காட்டியுள்ளார். துரை வைகோவின் அரசியல் வருகை மற்றும் செயல்பாடுகள் மீதான அதிருப்தி காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பே மதிமுகவிலிருந்து வெளியேறிய இந்த அதிருப்தி தலைவர்கள், விரைவில் தங்களை திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொள்ள உள்ளதாகத் தெரிகிறது.

இந்த அதிரடி அரசியல் நகர்வு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மீது திமுக தலைமை கொண்டிருந்த மறைமுக அதிருப்தியை தற்போது வெளிப்படையாகவே உணர்த்துவது போல் அமைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவலான பேச்சுகள் எழத் தொடங்கியுள்ளன.