“தவெக எம்.எல்.ஏ-க்களுக்கு 40 கோடி ரூபாய் பேரம் உண்மைதான்”….. மறைமுகக் கூட்டணிக்கு ஸ்டாலின் முயற்சி… துரை வைகோ வெளியிட்ட பகீர் தகவல்….!

Spread the love

சேலம் செல்வதற்காகக் கோவை விமான நிலையத்திற்கு வந்தடைந்த மதிமுக முதன்மைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ, செய்தியாளர்களைச் சந்தித்துத் தமிழக அரசியல் மற்றும் நிர்வாக விவகாரங்கள் குறித்துப் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த பிறகும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மறைமுகக் கூட்டணியை உருவாக்க முயற்சி செய்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஆட்சி அமைந்து ஆறு மாதங்களைக் கடந்த நிலையிலும், தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 40 கோடி ரூபாய் தொடர்பாகப் பேரம் பேசப்பட்டதாகவும், மறைமுகக் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போதும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் துரை வைகோ கூறியுள்ளார்.

காவிரி நதிநீர் விவகாரம் குறித்துப் பேசிய மதிமுக எம்பி, தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் வழங்க வேண்டும் என்பதில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மிகத் தெளிவாக உள்ளதாகச் சுட்டிக்காட்டினார். ஆனால், பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் திரித்துப் பேசி கர்நாடக முதலமைச்சர் பொய்யான தகவல்களைத் தெரிவித்து வருவது கண்டிக்கத்தக்கது என அவர் சாடினார். நீர் மேலாண்மை அமைப்பு வழங்கிய தகவல்களைக் கூட கர்நாடக அரசு முறையாகப் பின்பற்றவில்லை என்றும், இந்த விவகாரத்தில் தமிழக பாஜகவினர் கேள்வி எழுப்புவதோடு, இரு மாநிலப் பிரச்சினைக்கு மத்திய அரசு உரிய தீர்வு காண வேண்டும் என்றும் துரை வைகோ வலியுறுத்தினார்.

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாகக் கருத்து தெரிவித்த அவர், அத்தகைய சம்பவம் நடைபெறவில்லை எனச் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் விளக்கமளித்துள்ளதாகக் குறிப்பிட்டார். மாவட்ட ஆட்சியரும் இதுதொடர்பாக எந்தப் புகாரும் அளித்ததாகத் தெரியாத நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பொதுவெளியில் இழிவுபடுத்தும் வகையில் பேசியிருப்பது ஏற்புடையதல்ல என துரை வைகோ விமர்சித்துள்ளார்.

மேலும், தமிழக அரசின் நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் முறைகேடு புகார்கள் குறித்துப் பேசிய துரை வைகோ, நூலகப் புத்தகக் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவிலேயே மிகப்பெரிய முறைகேடுகளில் ஒன்றாகக் கருதப்படும் அளவிற்குப் பல்வேறு தவறுகள் நடைபெற்றுள்ளதாகத் தெரிவித்தார். இதுகுறித்து அரசு தரப்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதேபோல் ஜெம் வீரமணி தொடர்பான வழக்கில் கடந்த 15 முதல் 20 ஆண்டுகளாக நடைபெற்ற பல்வேறு விவகாரங்கள் குறித்தும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். தவறு செய்பவர்கள் அதிகாரிகளாக இருந்தாலும், அமைச்சர்களாக இருந்தாலும் அவர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே தங்களது நிலைப்பாடு என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Nanthini

Recent Posts

அம்மாடியோ… இந்த காலத்துல இப்படி ஒரு மருமகளா?… நடக்க முடியாத மாமனாரைத் தோளில் சுமந்து சென்ற பெண்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!

நடக்க முடியாத தனது மாமனாரை மருமகள் ஒருவர் தன் தோளில் சுமந்து செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சி தற்போது இணையத்தில்…

7 மணத்தியாலங்கள் ago

இது பள்ளியா?… இல்ல சித்திரவதைக் கூடமா?… 3 வயது பிஞ்சுக் குழந்தையை… கயிற்றால் கட்டித் தாக்கிய ஆசிரியர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில், மூன்று வயது ப்ரீ-கேஜி மாணவன் ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளரால் தாக்கப்பட்ட…

7 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… உயிருள்ள பாம்பைக் கழுத்தில் சுற்றி சாகசம்… பூஜையின் போது கடித்ததில் பிரபல… பாம்பு பிடிப்பவர் பரிதாப பலி…!

மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடிப்பவரான ‘சர்பபந்து’ என்பவர், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மானசா…

7 மணத்தியாலங்கள் ago

பலமுறை நடந்த கொடூரம்… வெளிவந்த உண்மை… சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர்… நீதிமன்றம் எடுத்த முடிவு என்ன தெரியுமா?…!!

ஆசை வார்த்தை கூறி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 55 வயது முதியவருக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடுமையான…

8 மணத்தியாலங்கள் ago

என் கணவனுடனா பழகுகிறாய்?… உன்னை உயிரோடு விடமாட்டேன்… ரூ 13 லட்சம் கூலிப்படையை ஏவி… தோழியைத் தீர்த்துக்கட்டிய மனைவியின் வெறிச்செயல்…!!

மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 35 வயதான வர்ஷா துர்கர் என்ற விமான நிறுவன ஊழியர் கொலை…

8 மணத்தியாலங்கள் ago

கடவுளே… கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா?… வீட்டு வாசல் சாக்கடைக்குள் விழுந்த வியாபாரி… காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்த பொதுமக்கள்… இணையத்தில் நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சகேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மனிதநேயமற்ற அலட்சியத்தால் ஒரு துயரச் சம்பவம்…

8 மணத்தியாலங்கள் ago