“வெட்கம்கெட்ட அரசுன்னு சொன்னப்ப கண்டுக்கல.. ஆனா காவிரி நீர்னு சொன்னதும் தூக்கிட்டாங்க!”…. உதயநிதி ஓபன் டாக்..!

By Nanthini on ஆவணி 17, 2026

Spread the love

தனது கைது நடவடிக்கை குறித்து திமுக நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், விஜய் தலைமையிலான அரசை டம்மி முதல்வர், வெட்கம்கெட்ட அரசு, கேடுகெட்ட அரசு என்றும், விவசாயிகளை நடுரோட்டில் கைவிட்டுவிட்டனர் என்றும் கடுமையாக விமர்சித்ததற்காகவே காவல்துறையினர் தன்னை கைது செய்ய வந்துள்ளனர் என்று தான் கருதியதாகத் தெரிவித்தார்.

ஆனால், இந்த கடுமையான விமர்சனங்களுக்கு எந்த எதிர்வினையும் ஆற்றாத அரசு, இறுதியாக காவிரி நீர் உரிமைக்காகவும் தமிழக விவசாயிகளுக்காகவும் குரல் கொடுத்ததற்காகவே தன்னை கைது செய்ததாகக் குறிப்பிட்ட அவர், அரசினுடைய இந்த நகர்வை தனக்கு இலவசமாக ரோடு ஷோ நடத்தி மக்கள் மத்தியில் விளம்பரம் தேடித்தந்த ஒரு நடவடிக்கையாகவே பார்க்கிறேன் என நக்கலாகப் பேசினார்.