மீண்டும் ஏழரையை இழுத்த இஸ்ரேல்..! லெபனான் தாக்குதலால் ஈரானுடன் முடியவிருந்த ஒப்பந்தம் தவிடுபொடி.. உலக நாடுகளுக்கு புதிய தலைவலி..!

By Soundarya on ஆனி 15, 2026

Spread the love

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பல வாரங்களாக நடைபெற்று வந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதிப் பேச்சுவார்த்தை, லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய திடீர் வான்வழித் தாக்குதலால் தற்போது பெரும் முட்டுக்கட்டையைச் சந்தித்துள்ளது. ஈரானுடன் இன்றே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும், உடனடியாக ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்த நிலையில், இந்தத் தாக்குதல் ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் கடுமையான சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதியான தாஹியே நகரில் உள்ள ஒரு கட்டிடத்தைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய இந்த வான்வழித் தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் 6 பேர் படுகாயமடைந்தனர். லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் தாங்கள் பேச்சுவார்த்தைக்கு உடன்பட மாட்டோம் என்று ஈரான் ஏற்கனவே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், அமெரிக்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகக் கூறி, இனி அவர்களுடன் பேச்சுவார்த்தை தொடர்வதில் எந்த அர்த்தமும் இல்லை என ஈரானின் பேச்சுவார்த்தைக் குழு அதிருப்தி வெளியிட்டுள்ளது.

   

அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் மத்தியஸ்தம் செய்து இந்த அமைதி ஒப்பந்தம் இறுதி நிலையை எட்டிய வேளையில், இஸ்ரேல் வேண்டுமென்றே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். பிராந்தியத்தில் அமைதி திரும்புவதைத் தடுக்கும் இஸ்ரேலின் இந்தச் செயலுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளதால், மத்திய கிழக்கு நாடுகளிடையே மீண்டும் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளது.