“டிடிவி தினகரனுக்கு விழுந்த பலத்த அடி”… இரவோடு இரவாக திமுகவில் இணைந்த அமமுக முக்கிய புள்ளி… அதிரடி டுவிஸ்ட்….!

By Nanthini on பங்குனி 27, 2026

Spread the love

தேர்தல் களத்தில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில், டிடிவி தினகரனின் நம்பிக்கைக்குரிய தளபதியாகத் திகழ்ந்த அமமுக துணைப் பொதுச்செயலாளர் தஞ்சாவூர் ரெங்கசாமி, முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தது டெல்டா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) தஞ்சாவூர் தொகுதி அமமுகவிற்கு ஒதுக்கப்படாததால் அதிருப்தியில் இருந்த அவர், தனது ஆதரவாளர்களுடன் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார். அமமுகவின் முக்கியத் தூணாகவும், டெல்டா மாவட்டங்களில் கட்சியின் முகமாகவும் விளங்கிய ரெங்கசாமியின் இந்த விலகல், வரவிருக்கும் தேர்தலில் டிடிவி தினகரனுக்குப் பலத்த பின்னடைவாகவும் அதிர்ச்சியாகவும் பார்க்கப்படுகிறது.