சின்ன குட்டின்னு கூட பார்க்கல…! இறந்து கிடந்த தாய்…! பால் தேடி ஊர்ந்து சென்ற குட்டிகள்… தூக்கி வீசிய போதை ஆசாமி… சோஷியல் மீடியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்திய வைரல் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 14, 2026

Spread the love

தாய்லாந்து நாட்டில் போதைப்பொருளுக்கு அடிமையான நபர் ஒருவர் அரங்கேற்றியுள்ள மனிதாபிமானமற்ற செயல் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பையும் அழுகையையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த தாய் நாய் ஒன்று விறைத்துப்போய்க் கிடக்க, அதன் அருகில் இருந்த பச்சிளம் குட்டி நாய்கள் பசியால் வாடியபடி தாயின் மீது ஊர்ந்து பால் தேடிச் சத்தமிடும் பரிதாபக் காட்சியை அந்த நபர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

மட்டுமின்றி, தாயை இழந்த அந்தப் பிஞ்சு நாய் குட்டிகளை அவற்றின் கழுத்துப் பகுதியைப் பிடித்துத் தூக்கி வீசி, “மனிதர்களுக்கே வழியில்லை, இதில் விலங்குகள் எப்படிப் பிழைத்துக் கொள்ளும்” என இரக்கமின்றிப் பதிவிட்டுள்ளார். பசியால் கதறும் அந்த வாயில்லாப் பிஞ்சுகளின் நிலையைக் கண்டு ஆத்திரமடைந்த நெட்டிசன்கள், அந்த மிருக மனிதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உடனடியாக அந்த நாய் குட்டிகளைக் காப்பாற்ற வேண்டும் என்றும் இணையத்தில் தீவிரமாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.