ஐயோ… எனக்கு பெட்ரோல் தான் வேணும்… சரியான திசையில் நிறுத்தச் சொன்ன ஆத்திரத்தில்… காரை பின்னோக்கி பறக்கவிட்டு… 4 பேரை பந்தாடிய குடிபோதை ஓட்டுநர்… நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 1, 2026

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பம்பில் எரிபொருள் நிரப்புவதற்காக கார் ஓட்டுநர் ஒருவர் தனது வாகனத்தை தவறான திசையில், அதாவது டீசல் முனையின் பக்கம் நிறுத்தியுள்ளார். இதனால் காரை மறுபுறம் மாற்றி நிறுத்துமாறு பம்ப் ஊழியர் அவரிடம் கேட்டுள்ளார். ஆனால், ஊழியரின் பேச்சைக் கேட்காமல் ஆத்திரமடைந்த ஓட்டுநர், தனது காரை அதிவேகத்தில் பின்னோக்கி இயக்கி, பம்ப் அருகில் நின்றுகொண்டிருந்த 4 பேர் மீது மோதியுள்ளார்.

இந்த பயங்கர விபத்திற்குப் பிறகு, அங்கிருந்தவர்களின் அதிர்ச்சியைப் பயன்படுத்தி, கார் ஓட்டுநர் உடனடியாக அந்த இடத்தை விட்டு தப்பியோடியுள்ளார். சம்பவத்தின்போது அந்த ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த முழு சம்பவமும் பெட்ரோல் பம்பில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

   

https://twitter.com/ashishpaswan0/status/2094428299837726954/video/1

   

இந்த விபத்துத் தொடர்பாக சிவில் லைன்ஸ் காவல் நிலையப் பகுதியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளும், தப்பியோடிய மதுபோதை ஓட்டுநரைத் தேடும் பணியும் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.