தமிழ்நாடே அதிரப் போகுது…. ரூ.264.14 கோடி நிதி ஒதுக்கீடு… போதைப்பொருள் கும்பலுக்கு ஆப்பு வைத்த முதல்வர் விஜய்…!

By Nanthini on ஆவணி 10, 2026

Spread the love

தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், ரூ.264.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 65 சிறப்பு போதைப்பொருள் தடுப்புப் படைகளை உருவாக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தின் 37 மாவட்டங்களையும் உள்ளடக்கி அமைக்கப்படும் இந்த புதிய பணிக்குழு, முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் என்றும், இதில் 65 ஆய்வாளர்கள், 130 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 325 காவலர்கள் உட்படப் பல அதிகாரிகள் பணியமர்த்தப்படவுள்ளனர் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாகத் தலைநகர் சென்னையில் மட்டும் 12 தடுப்புப் படைகளும்; ஆவடி, தாம்பரம், சேலம், கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை மற்றும் நெல்லை ஆகிய மாநகரங்களில் தலா 2 படைகளும் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளன. அரசின் இந்நடவடிக்கை மாநிலம் முழுவதும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை அடிவேரோடு அறுப்பற்கான ஒரு தீர்க்கமான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.