முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அதிமுக கூட்டத்தில் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகள் தற்போது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தேனியில் நடைபெற்ற ஜெயலலிதா பேரவை ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றிய அவர், முல்லைப் பெரியாறு, மேகதாது மற்றும் காவிரி போன்ற முக்கிய வாழ்வாதாரக் கோரிக்கைகள் குறித்துப் பேசாமல், ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் தேவையின்றி நடிகை திரிஷாவின் பெயரை இழுத்து சண்டையிட்டுக் கொள்வதாக விமர்சித்தார். “காவிரிப் பிரச்சினைக்காக இருதரப்பும் சண்டை போடுவார்கள் என்று பார்த்தால், திரிஷா அண்ணிக்காக சண்டை போடுகிறார்கள்” என்று அவர் கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இப்பேச்சின் மூலம் அவர் தமிழக முதலமைச்சரையும், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளையும் அவமதிக்கும் வகையில் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதலமைச்சர் குறித்து சமூக ஊடகங்களிலும் பொதுவெளியிலும் அவதூறு கருத்துகளைத் தொடர்ந்து பரப்பி வருவதாகக் கூறி, தவெக நிர்வாகிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஆர்.பி. உதயகுமார் மீது அதிகாரப்பூர்வ புகார் மனுவை அளித்துள்ளனர். முக்கிய மக்கள் பிரச்சினைகளை திசைதிருப்பும் வகையிலும், நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசிய முன்னாள் அமைச்சர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
