பழைய வண்ணாரப்பேட்டை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் மோகன்ஜி. தொடர்ந்து திரௌபதி பகாசூரன் போன்ற படங்களை அவர் இயக்கினார். சமீபத்தில் அவரது இயக்கத்தில் 14ம் ஆண்டு நூற்றாண்டு வரலாற்று பின்னணியில் உருவான திரௌபதி 2 படம் வெளியானது. இந்த படம் சுமார் 12 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானதாக சொல்லப்படுகிறது.
ஆனால் உலகம் முழுவதும் 400க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியான இந்த படம் ரூ. 2 கோடி வசூலை கூட தாண்டவில்லை என்று பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான தலைவர் தம்பி தலைமையில் படம் ரூ. 25 கோடி வசூலை அள்ளிய நிலையில் இந்தியிலும் இந்த படம் ரீமேக் செய்யப்பட உள்ளது. இந்த படத்தின் பட்ஜெட் ரூ. 6 கோடி மட்டும்தான் என்று சொல்லப்படுகிறது.
