BREAKING: டாக்டர் ராமதாஸ் சென்னை அப்போலோவுக்கு மாற்றம்.. அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்…!!

By Soundarya on சித்திரை 13, 2026

Spread the love

பாமக நிறுவனர் ராமதாஸ் தேர்தல் பரப்புரையின் போது ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக, மேல் சிகிச்சைக்காகச் சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார். நேற்று (ஏப்., 12) சேலம் பள்ளப்பட்டியில் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது, அவர் எதிர்பாராதவிதமாகத் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மயக்கமடைந்த அவரை உடனடியாக மீட்டுச் சேலம் சீமநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டன. தற்போது அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணிக்கவும், கூடுதல் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு அவர் அழைத்து வரப்படுகிறார். இந்தத் தகவல் பாமக தொண்டர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.