கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வரதட்சணைப் பேய்க்கு மேலும் இரண்டு உயிர்கள் பலியாகியுள்ளன. ஓய்வுபெற்ற வேளாண் அதிகாரி ராஜீவ் என்பவரின் மகள் கிரீமாவிற்கும், வெளிநாட்டில் வேலை பார்க்கும் உன்னிகிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது பெண் வீட்டார் தரப்பில் சுமார் 200 பவுன் தங்க நகைகளும் (சுமார் 1.6 கிலோ), வீடும் சீதனமாக வழங்கப்பட்டது. இவ்வளவு சொத்துக்கள் கொடுத்த பின்பும், கூடுதல் வரதட்சணை கேட்டு உன்னிகிருஷ்ணன் கிரீமாவைத் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
திருமணம் முடிந்த 25 நாட்களிலேயே கிரீமாவைப் பிரிந்து உன்னிகிருஷ்ணன் மீண்டும் வெளிநாட்டிற்குச் சென்றார். கடந்த ஆறு ஆண்டுகளாகத் தனது மனைவியுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்த அவர், அண்மையில் உறவினர் ஒருவரின் மரணத்திற்காக ஊருக்குத் திரும்பியுள்ளார். அப்போது கிரீமாவும் அவரது தாய் சஜிதாவும் அவரைச் சந்தித்துத் தங்களை ஏற்றுக்கொண்டு வாழுமாறு கெஞ்சியுள்ளனர். ஆனால், உன்னிகிருஷ்ணன் அவர்களை மிகக் கேவலமாகப் பேசி அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மனவேதனையடைந்த தாயும் மகளும், சயனைடு அருந்தி தங்கள் இன்னுயிரைத் துறந்தனர்.
தற்கொலைக்கு முன்பாக சஜிதா எழுதிய உருக்கமான கடிதத்தில், “பயன்படுத்திய உடையைக் கழற்றி எறிவது போலத் தன் மகளை உன்னிகிருஷ்ணன் நடுத்தெருவில் விட்டுச் சென்றார்” என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், உன்னிகிருஷ்ணன் தரப்பினர் தங்கள் சொத்தில் ஒரு பிடி மண்ணைக் கூட அனுபவிக்கக் கூடாது என்றும் அதில் வலியுறுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாகத் தப்பியோட முயன்ற உன்னிகிருஷ்ணனை மும்பை விமான நிலையத்தில் வைத்துப் போலீசார் கைது செய்துள்ளனர். வரதட்சணை எனும் சமூக அவலத்தால் ஒரு குடும்பமே சிதைந்துள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீட் (NEET-UG 2026) வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ (CBSE) தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக, நாட்டின் கல்வித்துறையையும் லட்சக்கணக்கான மாணவர்களின்…
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு மாபெரும் வரலாற்றுச் சாதனை இன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து…
ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுகாதாரத்தை 100 சதவீதம் உறுதி செய்யும் நோக்கில், இந்திய ரயில்வே உணவு…
கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபொண்பரப்பி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரிடம்…
தமிழக அரசியலில் இன்று ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அதிரடித் திருப்புமுனை நிகழ்ந்துள்ளது. ஒருகாலத்தில் தமிழகத்தின் அசுர பலம் வாய்ந்த…
வங்கித் துறையில் பணிபுரிய ஆர்வமுள்ள நம்ம ஊர் இளைஞர்களுக்கு ஒரு புதிய வேலைவாய்ப்புச் செய்தியை இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான…