“எனக்கு 8 நோபல் பரிசு கொடுத்திருக்கணும்…” இந்திய-பாகிஸ்தான் போரைத் தடுத்தேன்…! நார்வே மீது பாய்ந்த டொனால்ட் ட்ரம்ப்…!!

By Devi Ramu on ஐப்பசி 10, 2026

Spread the love

அமெரிக்காவின் சிராகியூஸ் நகரில் நடைபெற்ற பேரணி ஒன்றில் உரையாற்றிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாததால் நார்வே நாட்டையும் நோபல் தேர்வுக் குழுவையும் கடுமையாகச் சாடியுள்ளார். எட்டு உலகளாவிய மோதல்களையும் போர்களையும் முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக தனக்கு 8 நோபல் பரிசுகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், தகுதியான தனக்குப் பரிசை வழங்காமல் நார்வே நாடு அழியாத களங்கத்தை ஏற்படுத்திக் கொண்டதாகவும் அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.

மேலும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான அணு ஆயுதப் போரைத் தடுத்து நிறுத்தியதன் மூலம் தான் 5 கோடி மக்களின் உயிரைக் காப்பாற்றியதாகவும் அவர் உரிமை கோரினார். 2026-ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஐநா மனித உரிமைகள் துறை ஆணையர் நவி பிள்ளைக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், “யாரென்றே தெரியாத ஒரு தாராளவாத நபருக்குப் பரிசை வழங்கியுள்ளனர்” என்று கிண்டலடித்த ட்ரம்ப், தீவிர இடதுசாரி சித்தாந்தவாதிகளால் நோபல் பரிசு தன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.