அடே… பணி ஓய்வு பெறும் கடைசி நாளில்… தப்பிக்க பாக்குறீயா?… குற்றவாளியை மடக்கிய நாயின் மீது பாய்ந்த குண்டு… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

By Swetha on ஐப்பசி 10, 2026

Spread the love

அமெரிக்காவின் போர்ட்லண்ட் நகரில், கொலை வழக்கு குற்றவாளியை கைது செய்யும் நடவடிக்கையின் போது, காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ‘கைலோ’ எனப்படும் 6 வயது ஜெர்மன் ஷெப்பர்ட் மோப்ப நாய் பரிதாபமாக உயிரிழந்தது. ஜிப்ரெம் பகுதியில் ஜெப் தாம்சன் என்பவரை சுட்டுக் கொன்ற எடி பிராண்டன் டாட் கேம்பல் என்ற தலைமறைவு குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். மோட்டார் சைக்கிள் திருட்டு மற்றும் தப்பியோடும் முயற்சியில் ஈடுபட்ட அந்த நபரைக் கண்டுபிடிக்க, மோப்ப நாய் கைலோவின் உதவி நாடப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

குற்றவாளி ஒரு மோட்டல் வாகன நிறுத்துமிடத்திற்குள் ஓடியபோது, கைலோ தனது கடைசிப் பணி நாளிலும் தனது கடமையைச் சிறப்பாகச் செய்து பதுங்கியிருந்த குற்றவாளியைப் பிடித்து கீழே இழுத்தது. அப்போது அந்த நபர் போலீசாரை நோக்கி கைத்துப்பாக்கியை நீட்டியதாகக் கூறப்படும் நிலையில், பதற்றமடைந்த நான்கு அதிகாரிகள் சுடத் தொடங்கினர். இதில் குற்றவாளி சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டதுடன், எதிர்பாராதவிதமாக அந்தத் தாக்குதலில் மோப்ப நாய் கைலோவும் படுகாயமடைந்தது. பின்னர் ஆபத்தான நிலையில் இருந்த அந்த நாய் மருத்துவர்களின் பரிந்துரைப்படி கருணைக் கொலை செய்யப்பட்டது.

   

https://twitter.com/Thefactsdude/status/2108721889971417587/video/1

   

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய வழக்கறிஞர்கள் மற்றும் அதிகாரிகள், அக்டோபர் 8 அன்று தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு இந்தத் துப்பாக்கிச் சூடு சட்டப்பூர்வமானது என்று தீர்ப்பளித்துள்ளனர். எனினும், அந்த நபர் வைத்திருந்த துப்பாக்கியில் தோட்டாக்கள் இல்லை என்பதும், நாயின் மீது எந்தவொரு நாய் கடித்த அடையாளங்களும் இல்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தனது ஓய்வு நாளுக்கு முந்தைய கடைசிப் பணியின்போதே ஒரு வீரத்துறவியைப் போல இந்த மோப்ப நாய் உயிர்த்தியாகம் செய்துள்ள இந்தச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.