ஸ்மார்ட் வாட்ச் முதல் வெள்ளி கொலுசு வரை.. கொங்கு தொகுதிகளை அள்ள போட்டி போடும் ஜாம்பவான்கள்…. வேலுமணியா.. செந்தில் பாலாஜியா..? 30 தொகுதிகளில் நடக்கும் மகா யுத்தம்….!

Spread the love

தமிழகத்தின் கொங்கு மண்டல அரசியலில், திமுகவின் செந்தில் பாலாஜி மற்றும் அதிமுகவின் எஸ்.பி. வேலுமணி ஆகிய இருவருக்கும் இடையிலான அதிகாரப் போட்டி தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய நான்கு முக்கிய மாவட்டங்களில் தலா 30 தொகுதிகள் என இருவருக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், யார் அந்தப் பகுதியில் உண்மையான ஆதிக்க சக்தியாகத் திகழ்கிறார்கள் என்பது குறித்த ‘டான்’ மோதல் தீவிரமடைந்துள்ளது. இரு தரப்புமே தங்களுக்கென தனித்தனி வியூகங்களை வகுத்து களமிறங்கியுள்ளன.

இரு கட்சிகளும் நடத்திய ரகசிய சர்வே முடிவுகள், இரு தரப்பிற்குமே பெரிய உற்சாகத்தைத் தரவில்லை என்பதுதான் தற்போதைய அரசியல் சூழலின் யதார்த்தம். திமுகவிற்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் எதிர்பார்த்த எழுச்சி கிடைக்கவில்லை என்றாலும், அதிமுகவிற்கும் பழைய செல்வாக்கு இல்லை என்பது இந்த ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இந்தச் சவாலை எதிர்கொள்ள, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களைக் கவர பணப்பட்டுவாடா முதல் பதவி வாக்குறுதிகள் வரை போட்டி போட்டுக் கொண்டு இரு தரப்பும் களப்பணியாற்றி வருகின்றன.

குறிப்பாக, இந்தத் தொகுதிகளில் விஜய் தலைமையிலான தவெகவின் வளர்ச்சி இரண்டு பெரிய கட்சிகளுக்குமே கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. கோவை தெற்கு போன்ற தொகுதிகளில் எடுக்கப்பட்ட சமீபத்திய சர்வேக்களில் விஜய் முன்னிலை வகிப்பது அல்லது மிகக் குறைந்த வித்தியாசத்தில் பின் தொடர்வது திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு தரப்பு வாக்குகளையும் சிதறடிக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஒருவரை ஒருவர் வீழ்த்தி, தங்களின் செல்வாக்கை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் இருவரும் தீவிரமாகச் செயல்படுகின்றனர்.

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக ஸ்மார்ட் வாட்ச் விநியோகம் போன்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. மறுபுறம், அதிமுகவினர் வாக்காளர்களுக்குப் பரிசுப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கி ஆதரவைத் திரட்டி வருகின்றனர். சமூக ஊடகங்கள் மூலம் பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும், பொதுக்கூட்டங்கள் மற்றும் நேரடி விசிட்டுகள் மூலம் மக்களைச் சென்றடைவதும் என, கொங்கு மண்டலத்தின் ‘டான்’ யார் என்பதைத் தீர்மானிக்க இரு தரப்பும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

Nanthini

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

3 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

3 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

3 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

3 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

4 மணத்தியாலங்கள் ago