அடப்பாவி..! 5 கோடி பணத்துக்கு ஆசைப்பட்டு 2 கால்களை அகற்றிய மருத்துவர்… கடைசியில இப்படி ஆகிடுச்சே..!!

By Soundarya on ஆடி 25, 2025

Spread the love

பிரிட்டனைச் சேர்ந்த மருத்துவர் நீல் ஹாப்பர் மருத்துவர் காப்பீட்டு தொகைக்காக தன்னுடைய கால்களை அகற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 5 கோடி ரூபாய் காப்பீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இரண்டு முழங்கால்களுக்கும் கீழே உள்ள பகுதியை அகற்றியுள்ளார். தன்னுடைய இரண்டு கால்களையும் வேண்டும் என்றே அகற்றியதாக காப்பீட்டு நிறுவனங்கள் நீதிமன்றத்தை அணுகி உள்ளது. இந்த வழக்கு விசாரணை தற்போது நடந்து வருகிறது. உடலுக்கு தீங்கு விளைவிக்காமல் முழங்கால்களை எப்படி அகற்றுவது என்பது குறித்த சில பிரிமியம் வீடியோக்களை நீல் ஒரு வலைதளத்திலிருந்து வாங்கியது கண்டறியப்பட்டது .

அவற்றின் அடிப்படையில் அவர் மற்றொரு மருத்துவர் உதவியோடு தன்னுடைய இரண்டு கால்களையும் அகற்றியுள்ளார். தனக்கு ரத்தநாள பிரச்சினை இருப்பதாகவும் முழங்கால் அகற்றப்படாவிட்டால் உடல் முழுவதும் பரவும் என்றும் தங்களை நம்ப வைத்து முயன்றதாக காப்பீட்டு நிறுவனங்கள் புகார் தெரிவித்துள்ளன.