‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை கம்பம் மீனாவின் அக்காவை பாத்துருக்கீங்களா?… வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படங்கள்…

By Begam

Published on:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் .இந்த சீரியலில் அண்ணன் தம்பி குடும்ப ஒற்றுமை பற்றி விரிவாக எடுத்துக் கூறுவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

   

மேலும் இந்த சீரியல் அன்பு, பாசம், ஒற்றுமை ,கோபம் ,வெறுப்பு, துரோகம் என அனைத்தையும் ஒருங்கே காட்டி வருகிறது.

ஒரு கூட்டுக் குடும்பத்தில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளையும் வெளிச்சம் போட்டு காட்டி வருவகிறது. தற்போது இந்த சீரியல் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.

தற்பொழுது இந்த சீரியலில் கதிர் தானாக முடிவெடுத்து ஐஸ்வர்யாவையும், கண்ணனையும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

இதை தற்பொழுது அறிந்த மூர்த்தி கதிரின் இந்த முடிவை ஏற்றுக்கொள்வாரா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த சீரியலில் பாக்கியா வீட்டில் வேலை செய்பவராக, ஆனால் குடும்பத்தில் ஒருவராக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் தான் கம்பம் மீனா.

இவர் பாக்கியலட்சுமி சீரியல் மட்டுமின்றி பாண்டியன் ஸ்டோர் சீரியல் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் கம்பம் மீனா. இவர் அவ்வப்பொழுது  தனது குடும்ப புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

 

சமீபத்தில் கூட இவர் தனது மகன் மற்றும் மருமகளின் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்திருந்தார்.

இதை தொடர்ந்து தற்பொழுது இவர் தனது அக்கா & சம்பந்தி என்று பதிவு செய்து தனது அக்காவின் புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.