Categories: சினிமா

கவுதம் கார்த்திக் முதல் கவின் வரை.. தல தீபாவளியை கொண்டாடப்போகும் பிரபலங்கள்  யார் யார் தெரியுமா…?

Spread the love

பிரபலங்கள் தங்களுக்குள் காதலித்து திருமணம் செய்து கொள்வது தற்பொழுது வழக்கமாகி விட்டது. அப்படி திருமணம் செய்து கொண்டு ‘தல தீபாவளி’யை கொண்டாட போகும் பிரபலங்கள் யார் யாருன்னு இப்ப பாக்கலாம் வாங்க..

1.கெளதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன்:

நவரச நாயகன் நடிகர் கார்த்திக்கின் மகன் தான் நடிகர் கௌதம் கார்த்திக். இவர் ‘கடல்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் .இதைத்தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார். நடிகர் கௌதம் கார்த்திக் நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து நவம்பர் 28,  2002இல் திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது இவர்கள் இந்த வருடம் தங்களது தல தீபாவளியை கொண்டாட உள்ளனர்.

2. கவின் -மோனிகா:

நடிகர் கவின் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இதைத் தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா உடன் காதல் விவகாரத்திலும் சிக்கினார். இதை தொடர்ந்து வெளியில் வந்த அவர் பிஸியாக சினிமாவில் நடிக்க தொடங்கினார். இவர் தனது நீண்ட நாள் காதலியான மோனிகா என்பவரை ஆகஸ்ட் 20, 2023ல்  திருமணம் செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து அவர்கள் தங்களது தல தீபாவளியை நாளை கொண்டாட உள்ளனர்.

3. அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன்:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அசோக் செல்வன். இவர் நடிகர் அருண்பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன் என்பவரை செப்டம்பர் 13ஆம் தேதி 2023 இந்த வருடம் திருமணம் செய்து கொண்டார்.  இவர்களது திருமணம் எளிமையான முறையில் சொந்தங்கள் சூழ நடைபெற்றது. இந்நிலையில் இந்த ஜோடி தங்களது தல தீபாவளி நாளை கொண்டாட உள்ளனர்.

4. அமலா பால் – ஜகத் தேசாய்:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை அமலா பால். இவர் ஏற்கனவே இயக்குனர் ஏ எல் விஜயை 2014ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தன.ர் இதைத்தொடர்ந்து திரையுலகில் கவனம் செலுத்த தொடங்கியவர் ,பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தார். தற்பொழுது இவர் தனது இரண்டாவது திருமணத்தை முடித்துள்ளார். காதலர் ஜகத் தேசாய் என்பவரை நவம்பர் 5ம் தேதி 2023 இந்த வருடம் கரம் பிடித்தார்.  இந்த ஜோடியும் நாளை தங்களது தல தீபாவளியை கொண்டாட உள்ளனர்.

Begam

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

8 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

8 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

8 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

8 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

8 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

8 மணத்தியாலங்கள் ago