தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்பொழுது உருவாகி வரும் லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆவலை ஏற்படுத்தி உள்ளது. இத்திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜயுடன் த்ரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வருகிறது.
இன்னும் சில நாட்களில் லியோ படம் வெளியாக உள்ளது. எனவே தொடர்ந்த லியோ படக் குழு அப்டேடை வெளியிட்டு வருகிறது. கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தின் மூலம் விஜய் த்ரிஷா கூட்டணி சேர்ந்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
லியோ படத்தில் நடித்த நடிகர்களை எங்கு பார்த்தாலும், லியோ படத்தின் அப்டேட்டை தான் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். தற்பொழுது இத்திரைப்படத்தில் நடிகர் மன்சூர் அலிகானும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான், லியோ இசை வெளியீட்டு விழா பற்றி கொடுத்த அப்டேட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் மன்சூர் அலிகானிடம் செய்தியாளர் ஒருவர் ‘விஜய், அர்ஜூன், சஞ்சய் தத் பிறந்த நாட்களில் லியோ அப்டேட் வெளியானது. அதே போல் உங்களின் பிறந்த நாளை ஒட்டி லியோ அப்டேட் வெளியாகுமா?’ என கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அதற்கு பதிலளித்த மன்சூர் அலிகான்,’நான் பிறந்த நாளே கொண்டாடுவதில்லை. சரக்கு படத்தின் ஆடியோ மட்டும் வரும். நிலாவின் ஆடியோ லான்ச் நிலாவில் நடக்கும்’ என்று கூறி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.
ஒரு வருடத்தில் மட்டும் ரெப்போ வட்டி விகிதம் 1 சதவீதம் வரை குறைந்ததால், கடன் வட்டி விகிதங்களை வங்கிகள் குறைத்து…
குஜராத்தின் அகமதாபாத்தில் புதன்கிழமை, அக்டோபர் 29 அன்று, மூன்று வயது சிறுமி மீது கார் மோதிய சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில். எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்று ஊரை அடித்து உலையில்…
மெலிசா என்று பெயரிடப்பட்ட புயலானது கரீபியன் நாடுகளில் தாக்கி வருகிறது. ஹைதி, மைக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த புயலால் பாதிப்புகளை…
தமிழக தேர்தல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரச்சாரம் மற்றும்…
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வரும் நிலையில் அதிமுக மற்றும் திமுக…