உலகில் பலவிதமான ருசியாக உணவுகள் இருக்கிறது. பெரும்பாலானவர்களுக்கு உணவை சூடாகவும் காரமாகவும் சாப்பிடுவது என்பது மிகவும் பிடிக்கும். ஆனால் அடிக்கடி சூடான காரமான உணவுகளை சாப்பிடும்போது உங்களது மனநிலை பாதிக்கும் என்று ஒரு கூற்று கூறப்பட்டு வருகிறது. அது உண்மைதானா மருத்துவர்கள் கூறுவது என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

தினமும் சூடான உணவை சாப்பிடுவது நேரடியாக மனநிலையை பாதிக்கும் என்பதற்கு எந்தவொரு அறிவியல் ஆதாரமில்லை. ஆனால் மிகவும் காரமான அல்லது சூடான உணவை தொடர்ந்து உட்கொள்வது உடல் மற்றும் மூலையில் சில எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். அதனால் தொடர்ந்து சூடான உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
சூடான காரமான உணவுகளை அடிக்கடி நீங்கள் சாப்பிட்டு வரும்போது உங்களுக்கு செரிமான பிரச்சனைகள் நெஞ்செரிச்சல் வயிற்று வலி போன்றவை உண்டாகலாம். மேலும் காரமான உணவில் உள்ள கேப்சைசின் செரிமான பாதை மற்றும் உடலின் பிறப்பகுதிகளில் வீக்கத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மேலும் அதிக காரமாகவும் சூடாகவும் உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது ஊட்டச்சத்து குறைபாடுகளை ஏற்படுத்தும். உளவியல் ரீதியாக பார்க்க போனால் இதுபோன்று சூடான காரமான உணவுகளை சாப்பிடும் போது பதட்டம் மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் எழலாம். மேலும் எப்போதுமே ஒரு மிதமான சூட்டில் இருக்கும் உணவுகளை நன்றாக மென்று அதை ரசித்து சாப்பிடும் போது தான் அதனுடைய ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும். அப்படி சாப்பிடுவது தான் சிறந்த முறை என்றும் மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள்.
