விடாமுயற்சி படம் இங்கு ஓடிட்டு இருக்க தல என்ன பண்ணிட்டு இருந்தார் தெரியுமா?.. அவரே வெளியிட்ட வீடியோ..!

By Nanthini on மாசி 7, 2025

Spread the love

நடிகர் அஜித்தின் 62 ஆவது திரைப்படம் தான் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இந்த திரைப்படத்தை இயக்கியுள்ள நிலையில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். வில்லனாக ஆரவ், ஆக்ஷன் கிங் அர்ஜுன், வில்லியாக ரெஜினா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக படத்தின் வேலைகள் நடைபெற்று வந்த நிலையில் படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது.

விடாமுயற்சி விமர்சனம்: படம் எப்படி இருக்கிறது? மகிழ் திருமேனி, அஜித்  கூட்டணிக்கு வெற்றியா? - BBC News தமிழ்

   

ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் படம் ரிலீஸ் ஆவதில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி திடீரென மாற்றப்பட்டது. அதன் பிறகு பிப்ரவரி 6ம் தேதி விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்ட நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக நேற்று விடாமுயற்சி திரைப்படம் வெளியானது.  ஏகப்பட்ட கட்டவுட்டுகள் வைக்கப்பட்டு பட்டாசுகள் வெடித்து ரசிகர்கள் பண்டிகையாக விடாமுயற்சி திரைப்படத்தை கொண்டாடினர்.

   

Vidaamuyarchi Leaked in Online: விடாமுயற்சி ரிலீசான சில மணி நேரத்தில்  இப்படியா ஆகணும்? படக்குழு தலையில் இடியை இறக்கிய விஷயம்! - Ajith Starring  Vidamuyaarchi Movie Leaked in ...

 

அஜர்பைஜானில் தனது காதல் மனைவியை கடத்திய கும்பலிடம் இருந்து அவரை ஹீரோ எப்படி காப்பாற்றுகிறார் என்ற கதைக்களத்தை கொண்ட விடாமுயற்சி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தை இங்கு பண்டிகையாக ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்க அஜித் கார் ரேஸில் இருந்துள்ளார். தெற்கு ஐரோப்பிய தொடர் 2025 போர்ஷே ஸ்பிரிண்ட் சவாலின் முதல் சுற்றுக்கான பயிற்சியை அவர் தொடங்கியுள்ளார். அது தொடர்பான வீடியோவை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Ajith Kumar Racing Team பதிவைப் பகிர்ந்துள்ளார் (@ajithkumarracing)