கடலுக்கு கப்பலில் சென்று மீன் பிடித்தலையே நாம் பலரும் பார்த்திருப்போம். ஆனால் இந்த வகையில் கரையில் நின்று கொண்டு மீன்பிடிப்பதை நம்மில் பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. மீன்பிடித்தல் முறைகளில் பல்வேறு வகைகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதில் நாட்டுப் படகு, விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலில் வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்தல்,

தூண்டில் மூலம் மீன் பிடித்தல், கரைவலை மூலம் மீன்பிடித்தல் என்று பல்வேறு முறைகளில் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தின் பிரதான தொழிலாக மீன் பிடித்தொழில் தான் காணப்படுகிறது.

இதிலும் குறிப்பாக தனுஷ்கோடி பகுதியில் வசித்து வரும் பாரம்பரிய மீனவர்கள் நாட்டுப் படகு விசைப்படகுகள் இன்றி இப்பொழுதும் கூட கரைவலை மீன்பிடிப்பில் தான் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகை மீன்பிடித்தலில் ஆண்கள் மட்டும் இன்றி பெண்களும் சேர்ந்து குடும்பத்தோடு மீன்பிடிக்கின்றனர்.

தற்பொழுது இந்த கரை விலை மீன் பிடித்தல் ஈடுபட்ட ஆண்களும் பெண்களும் எப்படி பாட்டு பாடி கொண்டு அழகாக வலையை இழுக்கின்றனர் என்பதை விடியோவாக இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ….
View this post on Instagram
