சமீப காலமாக அதிகமாக நடக்கும் குளிர்சாதன பெட்டி வெடிப்பு… என்ன காரணமா இருக்கும் தெரியுமா…?

By admin on புரட்டாதி 12, 2024

Spread the love

சமீபத்திய வருடங்களில் குளிர்சாதனப்பெட்டி வெடிப்பது போன்ற செய்திகளை கேட்டு வந்திருப்போம். முந்தைய காலங்களில் ப்படி நடக்கவில்லை. தற்போது இந்த மாதிரி அதிகமான சம்பவங்கள் நடப்பதற்கான காரணம் என்ன பிரிட்ஜை எப்படி பராமரிப்பது பாதுகாப்பா இருப்பது என்பதை பற்றி இனி காண்போம்.

   

பொதுவாக பிரிட்ஜ் எனப்படும் குளிர்சாதனப்பெட்டி உணவு பொருட்கள், மருந்து பொருட்கள் போன்றவற்றை விரைவில் கெட்டுப்போகாமல் இருப்பதை தடுக்கிறது. தற்போது எல்லா வீடுகளிலும் பிரிட்ஜ் முக்கியமான பொருளாக இருக்கிறது. பிரிட்ஜ் வெடிப்பதற்கு முதன்மையான காரணமாக சொல்லப்படுவது மின் கசிவு ஆகும். ஆனாலும் பிரிட்ஜை பாதுகாப்பாக கையாள்வதும், பராமரிப்பதும் அவசியமான ஒன்றுதான்.

   

முன்பெல்லாம் பிரிட்ஜ்களில் 1.34 கேஸ் அளவு தான் பயன்படுத்தப்பட்டது. தற்போது வேகமாக குளிர்ச்சி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆர் 600 யூஎஸ்பி என்ற அளவில் கேஸ் கெபாசிட்டி கொண்ட பிரிட்ஜ்கள்தான் விற்பனையாகி வருகிறது. பிரிட்ஜ் பின்புறம் உள்ள கேசை கடத்த மெல்லிய பைப் லைன்கள் இருக்கும். இவை நாம் பரிட்ஜை நகட்டும் போதும் அசைக்கும் போதும் கீறல் விழுந்து கசிவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

 

அதுமட்டுமில்லாமல் பரிட்ஜுக்கு கீழே நாம் மாப் வைத்து துடைக்கும் போது கூட அது பிரிட்ஜில் பட்டு கம்பிகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இப்படி நடக்கும் போது எதிர்பாராத விதமாக கேஸ் லீக் ஆவதால் வெடிப்பதற்கான அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் பரிட்ஜை நகர்த்தும்போதும் நெருங்கும்போதும் கவனமாக கையாள வேண்டும். தினமும் பரிட்ஜை குறைந்தபட்சம் இரண்டு முறையாவது திறந்து மூட வேண்டும். நீண்ட நாட்கள் வெளியூர்களில் தங்க வேண்டியது இருந்தால் பொருட்களை வெளியே எடுத்து வைத்துவிட்டு பிரிட்ச்ஜைணைத்து விட்டு செல்வதே சிறப்பானது.

வெளியூர்களுக்கு செல்லும்போது பரிட்ஜை அணைத்து பிளக்கை எல்லாம் எடுத்து விட்டதுக்கு பிறகு லேசாக திறந்த நிலையில் வைக்க வேண்டும். இது மட்டுமல்லாது பிரிட்ஜுக்கு பின்னால் சேரும் தண்ணீரை அவ்வபோது எடுத்து விட வேண்டும். பிரிட்ஜுக்கு மேலே அயன் பாக்ஸ் அழகுப் பொருட்கள் போன்று தேவையில்லாத பொருட்களை வைக்கக்கூடாது. முக்கியமாக ஏசி உள்ள அறையில் பிரிட்ஜை பயன்படுத்தக் கூடாது. பிரிட்ஜில் உள்ள கம்ப்ரஸரை அடிக்கடி பார்த்து சரியாக இயங்குகிறதா என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும். கம்பரசரை மாற்றவில்லை என்றாலும் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு அதில் உள்ள கேஸ் மாற்றுவது நல்லது. வெப்பமான இடத்தில் பிரிட்ஜை வைக்கக் கூடாது.

குளிர்சாதன பெட்டிக்கு செலுத்தப்படும் மின்சாரம் வோல்டேஜ் சரியாக இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். ஸ்டெபிலைசர் பொருத்திக் கொள்வது மிகவும் நல்லது. மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றும்போது பிரிட்ஜ் வெடிக்காமல் தடுக்கலாம்.