தமிழ் சினிமாவில் சமீபகாலமாக வெளிவரும் படங்கள் ஆக்சன் காட்சிகள் நிறைந்ததாகவும் வன்முறை நிறைந்ததாகவும் இருக்கின்றது. ஒரு நல்ல லைட்டான அனைவரையும் சிரிக்க வைக்கிற கதை கொண்ட படங்கள் வருவது மிகவும் குறைவாக தான் இருக்கிறது. அந்த மாதிரி ஒரு சில படங்களை எடுத்து நம்மை சிரிக்க வைத்தவர் தான் இயக்குனர் ராஜேஷ். அவரைப் பற்றி இனி காண்போம்.
ராஜேஷ் நாகர்கோவிலில் பிறந்து வளர்ந்தவர். பொறியியல் பட்டப்படிப்பை முடித்த பின்பு சினிமாவில் நுழைய வேண்டும் என்று முடிவு செய்தார். ராஜேஷ் ஆரம்பத்தில் இயக்குனர் அமீர் மற்றும் எஸ்ஏ சந்திரசேகர் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ராஜேஷ் ஒரு கதையை கையில் வைத்துக் கொண்டு வெகு நாட்களாக வாய்ப்புக்காக காத்திருந்தார். பின்னர் 2009 ஆம் ஆண்டு அந்த கதையை படமாக்க வாய்ப்பு கிடைத்து சிவா மனசுல சக்தி திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் பெரிதாக வன்முறை அந்த மாதிரி எதுவுமே இல்லாமல் சாதாரண கதையம்சம் கொண்டிருந்தது. அது நல்ல விமர்சனங்களை பெற்றது.
2019 இல் பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தை இயக்கினார். ஆரம்பத்தில் நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்தாலும் போகப்போக இந்த படத்திற்கு நல்ல நல்ல விமர்சனங்கள் வர ஆரம்பித்தது. இன்றைய பரபரப்பான சூழலில் மக்கள் சிரிக்க தான் நேரமில்லாமல் இருக்கிறார்கள். அப்படி சிரிக்க வைத்தவர் தான் இயக்குனர் ராஜேஷ். இந்த பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படம் இன்றளவும் டிவியில் வரும் போதெல்லாம் அதை ரசித்து பார்க்கும் மக்கள் இருக்கிறார்கள்.
அடுத்ததாக 2012 ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலினை சினிமாவில் அறிமுகம் செய்து ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படமும் பெரிதாக சண்டை காட்சிகளோ செண்டிமெண்ட் இருக்காது. இந்த படம் வெளி வருவதற்கு முந்தைய நாள் மு க ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் குடும்பத்திற்கு தனியாக சோ ஏற்பாடு செய்து படம் போட்டு காண்பிக்கப்பட்டது. அப்போது முதலமைச்சர் மு க ஸ்டாலின் இயக்குனர் ராஜேஷை கூப்பிட்டு தம்பி இந்த படத்துல பெருசா கதையே இல்லையே ஆக்சன், செண்டிமெண்ட் இல்ல எப்படி வரும்னு பாத்துக்க அப்படின்னு சொன்னாராம். ஆனால் யாரும் எதிர்பாரா வகையில் இந்த படம் மாபெரும் ஹிட் ஆனது.
தொடர்ந்து ஆல் இன் ஆல் அழகுராஜா, கடவுள் இருக்கான் குமாரு, வணக்கம் டா மாப்பிள போன்ற திரைப்படங்களை இயக்கினார். இவரின் படங்கள் எல்லாமே பெரிதாக வன்மம் இல்லாமல் அனைவரையும் தியேட்டரில் சிரிக்கும் விதமாகவும் கலகலப்பாகவும் வைப்பதற்கான பாணியிலேயே இருக்கும். தற்போதைய காலகட்டத்தில் இவரை தான் தமிழ் சினிமா மிஸ் செய்கிறது என்று தோன்றுகிறது. இவர் மறுபடியும் வந்து ஒரு ஃபீல் குட் மூவி எடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.