உலகில் ஏராளமான விதவிதமான உணவுகள் இருக்கிறது. ஒவ்வொரு நாட்டிற்கும் என ஒவ்வொரு பாரம்பரியமான உணவு முறைகளும் கலாச்சாரங்களும் இருக்கும். முந்தைய காலம் போல் இல்லாமல் இப்போது எந்த நாட்டு உணவை நாம் சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறோமோ அங்கிருந்தே நம்மால் சாப்பிடவும் முடியும். ஆனால் இதில் ஒரு விஷயம் இருக்கிறது. தற்போது வரக்கூடிய உணவுகள் அனைத்திலும் கலப்படம் ஏதாவது ஒரு வகையில் இருக்கும். ஆனால் எந்த ஒரு கலப்படமும் இல்லாமல் உலகிலேயே தூய்மையான ஒரு உணவு இருக்கிறது. அது என்னவென்று உங்களுக்கு தெரியுமா?
உலகிலேயே மிகவும் தூய்மையான உணவுப் பொருள் என்ற கேள்விக்கு பல்வேறு சுகாதார நிபுணர்கள் நெய் தான் உலகில் தூய்மையான உணவு என்று பதிலளித்துள்ளார்கள். பல சாஸ்திரங்களில் கூட நெய் புனிதமான பொருளாக கருதப்படுகிறது. நூறாண்டுகளாக நம் முன்னோர்கள் நெய் உணவுப் பொருள்களுக்கு மட்டுமல்லாமல் பூஜைகளுக்கும் பயன்படுத்தி வந்தார்கள்.
விஞ்ஞான ரீதியாக பார்க்க போனாலும் கூட பசு நெய் தான் மிகவும் தூய்மையான உணவு பொருளாக கருதப்படுகிறது. இதில் சிறிதளவு கூட கலப்படம் கிடையாது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றது. நெய் என்ற பெயரில் கலப்படமான பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுவது கணக்கில் சேராது. ஆனால் வீட்டிலேயே சுத்தமான பசும்பால் எடுத்து அதை வெண்ணையாக்கி வெண்ணையில் இருந்து தயாரிக்கப்படும் நெய் முழுக்க முழுக்க தூய்மையானது ஆகும்.
உடல் ஆரோக்கியத்திற்கும் நெய் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. நெய்யில் வைட்டமின் A, D, E, K போன்ற முக்கியமான ஊட்டச்சத்துப் பொருட்கள் இருக்கின்றன. காலையில் வெறும் வயிற்றில் வெந்நீரில் சிறிது நெய் கலந்து குடித்து வரும்போது அது உடல் எடையை குறைக்க உதவுகிறது என்று கூறுகிறார்கள். நெய்யை தொடர்ந்து குழந்தைகளுக்கு கொடுக்கும்போது அவர்கள் மூளை சிறப்பாக செயல்படும். சருமத்திற்கு பொலிவை ஏற்படுத்தும். எழும்பை வலுப்படுத்தவும் உதவுகிறது என இதில் பல நன்மைகள் இருக்கிறது. ஆனால் இந்த உலகில் தூய்மையான உணவு என்பது நெய்தான் என்பது பலருக்கும் தெரியாது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ன் ஒரு பகுதியாக, வளர்ந்து வரும் இளம் நடிகரும் பாடகருமான கென் கருணாஸ் தனது குடும்பத்துடன்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது ஜனநாயகக் கடமையை…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.…
தபால் நிலையத்தின் 'கிசான் விகாஸ் பத்ரா' (KVP) திட்டம், முதலீட்டாளர்களின் பணத்தை பாதுகாப்பாக இரட்டிப்பாக்க உதவும் ஒரு சிறந்த சேமிப்புத்…
புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை (ENT) பிரிவில் காலியாக உள்ள 'திட்ட தொழில்நுட்ப உதவியாளர்' பணியிடத்திற்குத்…