சபரிமலை சுவாமியை தரிசிக்க புதிய விதி… இனி இப்படித்தான் ஐயப்பனை பார்க்க முடியும்…

By admin on ஐப்பசி 6, 2024

Spread the love

கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கோவில் என்றால் அது சபரிமலை ஐயப்பன் கோவில் தான். தமிழ்நாட்டில் இருந்தும் கேரளாவில் இருந்தும் பல தரப்பட்ட மக்கள் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து செல்வர். கார்த்திகை மாதம் என்றாலே அய்யப்பன் தான் என்று பலருக்கும் ஞாபகம் வரும். இங்கு ஆண்கள் மட்டும் தான் செல்வர். பல கன்னி சாமிகள் ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த சபரிமலை ஐயப்பனை தேடி வருகின்றனர்.

   

கேரள மாநிலத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் கிட்டத்தட்ட 468 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கு இருக்கும் மூலவர் ஐயப்பன் 9 விதமான பாஷாணங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகவும் மரகத கல்லை கொண்டு செய்யப்பட்ட சிலை எனவும் இருவேறு கருத்துக்கள் உள்ளது.

   

இருமுடி கட்டி மாலை போட்டு 18 படி ஏறி நெய் தேங்காய் உடைத்து சபரிமலை ஐயப்பனை சிவன் விஷ்ணு ஆகியோரின் அம்சமான தெய்வத்தை தரிசித்து வந்தால் தங்களது வாழ்க்கையில் நிச்சயம் மாற்றம் ஏற்படும் என்று கோடான கோடி பக்தர்கள் அவரை நாடி செல்கின்றனர். இனி வரும் காலம் ஐயப்பன் சீசன் ஆரம்பிக்க போகிறது. கார்த்திகை மாதம் மற்றும் மகர விளக்கு நேரத்தில் போது ஐயப்பனை தரிசிக்க புதிய விதி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அது என்னவென்றால் கட்டுக்கடங்கான பக்தர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இனி சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வேண்டும் என்று விரும்புவோர் கட்டாயம் முன்பதிவு செய்துவிட்டு செல்ல வேண்டும். நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் பக்தர்களை சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய அனுமதிக்க உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.