பிரபல நடிகரான ஜீவா தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஆர்பி சௌத்ரியின் மகன் ஆவார். கடந்த 2003-ஆம் ஆண்டு ரிலீசான ஆசை ஆசையாய் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.

அதன் பிறகு தித்திக்குதே படத்தில் ஹீரோவாக நடித்தார். கடந்த 2005- ஆம் ஆண்டு ரிலீசான ராம் திரைப்படம் ஜீவாவுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

அதன் பிறகு டிஸ்யூம், கற்றது தமிழ், தெனாவட்டு, சிவா மனசுல சக்தி ஆகிய படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

கச்சேரி ஆரம்பம், சிங்கம்புலி, ரௌத்திரம், வந்தான் வென்றான், நீ தானே என் பொன்வசந்தம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் ஜீவா நடித்துள்ளார். இப்போது ஜீவாவுக்கு 40 வயது ஆகிறது.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஜீவா போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் 40 வயதிலும் ஜீவா எப்படி இருக்கிறாரே.. அவருக்கு வயசு ஏறாதா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

