இந்து மத வழிபாட்டில் ஒவ்வொரு கடவுள்களை வழிபடுவதற்கு ஒவ்வொரு முறை இருக்கும். ஸ்லோகங்கள் சொல்வது மந்திரங்கள் படிப்பது எல்லாமே சற்று வேறுபாடு இருக்கும். அதே போல் தான் கோஷங்கள் போடுவது. வழிபாடு செய்யும்போது பக்தி மிகுதியால் பக்தர்கள் கடவுளை ஆராதிப்பார்கள். அது போல அம்மனுக்கு ஓம் சக்தி என்று கோஷம் போடுவார்கள். சிவபெருமானுக்கு சிவா சிவா என்று கூறுவார்கள். அது போல முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்தை பக்தர்கள் எழுப்புவார்கள். அரோகரா என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பது உங்களுக்கு தெரியுமா? அதைப்பற்றி இனி காண்போம்.

அர் ஹரோ ஹரா அல்லது ஹர ஹரோ ஹரா என்று கூறுவது பின்னாலில் அரோகரா என்று பேச்சு வழக்கில் மாறியது. இது முருகப்பெருமானை மகிழ்விக்கும் எளிய மந்திரம் ஆகும். கந்த சஷ்டி விரத நாட்களிலும் மற்ற முருகப்பெருமானின் வழிபாட்டு காலங்களிலும் விண்ணை மட்டும் கோஷமாக அரோகரா என்ற பக்தர்கள் கூறுவார்கள். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா என்று சூரசம்ஹார நாளில் கோஷத்தை பக்தர்கள் செய்து காண்போரை மெய்சிலிர்க்க வைத்து விடுவார்கள்.
இந்த அரோகரா என்று பக்தர்கள் கோஷம் எழுப்பும் இந்த வார்த்தைக்கு அர்த்தமானது தீயவைகள் அறுந்து நல்லவைகளை முருகன் வழங்க வேண்டும் என்பதாகும். முதலில் சைவ சமய அடியார்கள் மட்டுமே இந்த அரோகரா கோஷத்தை எழுப்பி வந்தனர். பின்னாளில் திருஞானசம்பந்தர் தன் பல்லக்கை சுமக்கும் பக்தர்கள் ஏலேலோ ஏலேலோ என்று பாடியபடி வந்தனர். அவர்களிடம் அர்த்தமில்லா வார்த்தையை கூறுவதற்கு பதிலாக அர்த்தமுள்ள அரோகரா பாடுங்கள் என்று கூறி சொல்லிக் கொடுத்தார்.
அன்றிலிருந்து அனைத்து தரப்பு மக்களும் அரோகரா என்ற கோஷத்தை எழுப்ப ஆரம்பித்து விட்டனர். வாழ்க்கையில் துன்பங்களை நீக்கி நல்லவைகளை அருள்வாய் என்பதற்கு அர்த்தம்தான் இந்த அரோகரா என்பதாகும். இந்த அரோகரா கோஷத்தை திருவண்ணாமலையாருக்கும் முருகப்பெருமானுக்கும் சொல்வது மிக சிறப்பு.

இந்த அரோகரா கோஷத்தை எழுப்பும்போது அது அளவற்ற பலன்களை நமக்கு தருகிறது. அப்படியே நம் மனம் முருகனோடு ஒன்றிணைந்து செல்வது போல் அந்த நேரத்தில் நமக்கு இருக்கும். முருகப்பெருமானின் சரவணபவ என்ற சாட்சாரத்திற்கு இணையாக போற்றப்படுவது இந்த அரோகரா என்ற வாழ்த்து கோஷம் ஆகும். இந்த அரோகரா கோஷத்தின் அர்த்தத்தை தெரிந்து முருகப்பெருமானை வழிபாடு செய்யும்போது மனதார அரோகரா சொல்லுங்கள்.
