1980களில் மிகவும் சாதுவான முகபாவனையுடன் திரையில் வலம் வந்து அன்றைய காலகட்டத்தில் பெண்களின் கனவு கண்ணன் என்றும், மைக் மோகன் என்றும் அழைக்கப்பட்டவர் தான் நடிகர் மோகன். பல தயாரிப்பாளர்களின் விருப்ப நாயகனாக ஒரு காதல் இளவரசன் போல வலம் வந்து கொண்டிருந்தார். இயக்குனர் சுந்தர்ராஜ் இயக்கத்தில் மோகன் நடித்து 1982ல் வெளிவந்த ‘பயணங்கள் முடிவதில்லை’ திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றி அடைந்தது.
இப்படம் நடிகர் மோகன் அவர்களின் திரைப்பயணத்தில் 300 நாட்களைக் கடந்த மூன்றாவது திரைப்படம். இதற்கு முன்பும் மோகன் நடிப்பில் நெஞ்சத்தை கிள்ளாதே, கிளிஞ்சல்கள் போன்ற திரைப்படங்கள் 300 நாட்கள் ஓடியது. ஹீரோவாக அறிமுகமாகிய முதல் மூன்று வருடங்களிலும் 300 நாட்கள் ஓடி சாதனை படைத்த மூன்று படங்களை கொடுத்த ஒரே ஹீரோ நடிகர் மோகன் மட்டுமே.
இப்படி வெற்றி படங்களில் நடித்து வெற்றி நாயகனாக வலம் வந்த இவரது திரை வாழ்க்கையின் இடையில் சில வதந்திகள் மற்றும் பிரச்சனைகளில் சிக்கியதால் இவரது சினிமா பயணம் அப்படியே முடிந்தது. தற்பொழுது ‘ஹரா ‘ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து அவர் ‘தளபதி 68’ ல் நடிக்க உள்ளார்.இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் முதலில் அரவிந்த் சாமி நடிப்பதாக இருந்தது. ஆனால், அவர் அந்த ரோலில் இருந்து வெளியேற தற்போது அவருக்கு பதிலாக நடிகர் மைக் மோகன் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில், தளபதி 68 படத்தில் வில்லனாக நடிக்க மைக் மோகன் ரூ. 2 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…