Connect with us

CINEMA

இயக்குனர் செல்வராகவனுக்கு எத்தனை குழந்தைகள் தெரியுமா?..!!! வைரலாகும் குடும்ப புகைப்படம் …!!!

இயக்குனர் செல்வராகவன் பிரபல நடிகர் தனுஷின் அண்ணன் ஆவார். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குனர் செல்வராகவன். ‘துள்ளுவதோ இளமை’ இவரது முதல் படம்.

   

இயக்குனராகவும், எழுத்தாளராகவும் செயல்படும் இவர் கதை எழுதி இயக்கியுள்ள தனுஷ் நடிப்பில்  ‘நானே வருவேன்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. பல படங்களில் நடிகராகவும் நடித்துக்கொண்டு வருகிறார். ‘காதல் கொண்டேன்’ படத்தில் தான் அறிமுகப்படுத்திய நடிகை சோனியா அகர்வாலை  காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் இருவரும் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து கொண்டனர். தன்னிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லீலாவதி என்று மகளும் ஓம்கார் மற்றும் ரிஷிகேஷ் என்ற இரு மகன்களும் உள்ளனர்.

இவர்கள் தற்போது எடுத்துக் கொண்ட குடும்ப புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

Continue Reading

More in CINEMA

To Top