அரவிந்த்சாமி தென்னிந்தியாவில் பணியாற்றிய பிரபலமான நடிகர் ஆவார். தமிழ் மலையாளம் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் அரவிந்த்சுவாமி. 1991 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் மம்முட்டி நடித்த தளபதி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அரவிந்த்சாமி.

1992 ஆம் ஆண்டு ரோஜா திரைப்படத்தில் நாயகனாக நடித்து அறிமுகமானார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று புகழின் உச்சிக்கு சென்றார் அரவிந்த்சாமி. தொடர்ந்து பம்பாய், மின்சார கனவு போன்ற திரைப்படங்களில் நடித்தார். 2000 களின் நடுப்பகுதியில் வாய்ப்பு குறையவே பின்னர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சினிமாவிலிருந்து ஓய்வெடுத்துக் கொண்டார்.
பின்னர் மணிரத்தினம் இயக்கிய கடல் திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார் அரவிந்த்சுவாமி. அதற்கு அடுத்ததாக தனி ஒருவன் தற்போது மெய்யழகன் வரை பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அரவிந்த்சாமி. இவ்வளவு பிரபலமாக இருக்கும் அரவிந்த் சுவாமி ஒரு கோடிக்கணக்காண வருமானம் கொண்ட தொழில் செய்யும் தொழிலதிபர் என்றால் உங்கள் நம்ப முடிகிறதா? அதை பற்றி இனி காண்போம்.

2000 களின் நடுப்பகுதியில் திரையுலகில் இருந்து ஓய்வு பெற்ற காலத்தில் அரவிந்தசாமி தனது தந்தையின் VD சுவாமி நிறுவனத்தை நிர்வகிக்க ஆரம்பித்தார். இதற்கு அடுத்ததாக 2005 ஆம் ஆண்டு டேலண்ட் மேக்ஸிமம் என்ற ஊதியம் செயலாக்கம் கம்பெனி உருவாக்கினார். இந்த டேலண்ட் மேக்சிமம் கம்பெனி 2022 ஆண்டளவில் ஆய்வின்படி தோரயமாக 3300 கோடி வருவாயை ஈட்டி வெற்றிகரமான தொழிலதிபர் என்று அரவிந்த்சாமி பெயர் பெற்றார்.
நடிப்பு வாழ்க்கையில் பல தடைகள் இருந்த போதும் தொழில் வாழ்க்கையில் வெற்றி பெற்ற தொழிலதிபராக திகழ்ந்து வருகிறார் அரவிந்த்சுவாமி. தற்போது அவர் நடிகராக இருப்பது வெறும் பார்ட் டைம் வேலை மட்டுமே. கோடிக்கணக்கான தொழிலை நிர்வகித்து வருபவர் அரவிந்த்சாமி என்பது பலருக்கும் தெரியாது.
