சமீபத்திய வருடங்களில் மிகவும் பிரபலமாக இருப்பது தான் ஐஸ் பேஸ் வாஷ் மற்றும் Ice Bath. தீபிகா படுகோனே, சமந்தா போல நடிகர் நடிகைகள் விளையாட்டு வீரர்கள் என பலர் இந்த Ice Bath எடுப்பதை பின்பற்றி வருகிறார்கள். இதனால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது என்றும் கூறுகிறார்கள். உண்மையிலே இந்த Ice Bath என்பது நல்லதுதானா அதனால் என்ன நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கிறது என்பதை பற்றி இனி காண்போம்.
பல பிரபலங்கள் மிகப்பெரிய தொட்டியில் ஐஸை நிரப்பி வைத்து அதில் இறங்குவதை ஒரு சிகிச்சை மாதிரியே செய்வதை நாம் பார்த்திருப்போம். இதனால் உடலுக்கு மிகவும் நன்மை கிடைக்கிறது. Ice Bath எடுக்கும் போது நம் உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தையும் Ice Bath மேம்படுத்தும் என பல ஆய்வுகளில் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
விளையாட்டு வீரர்கள் விளையாடும் போது அதிகமாக காயப்படுவார்கள். இந்த Ice Bath எடுத்துக் கொள்ளும் போது அவர்களது வலியை அது கட்டுப்படுத்தும். வீக்கத்தையும் குறைக்கும். உடல் வலியின் உணர்வை குறைக்கும். மேலும் ஐஸ் குளியல் ஆனது வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தலாம் மற்றும் வளர்ச்சிதை மாற்ற கோளாறுகளின் அபாயத்தை குறைக்கும் என்றும் கூறுகிறார்கள். உடலில் உள்ள கொழுப்பை குறைக்கவும் இந்த Ice Bath உதவுகிறது என்று கூறப்படுகிறது.
Ice Bath ஆனது நோய் எதிர்ப்பு சக்தியை நம் உடம்பில் கணிசமாக அதிகப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் குளிர்ந்த நீரில் குளிக்கும் போது நரம்பு மண்டலத்தை தூண்டி மனநிலையை மேம்படுத்தி மன அழுத்தத்தை சரி செய்ய உதவுகிறது. கவலை மற்றும் மனசோர்வை குறைக்கிறது எனவும் கூறுகிறார்கள். உங்களால் முடிந்தால் நீங்களும் Ice Bath எடுத்துக் கொள்ளும்போது பல ஆரோக்கிய நன்மைகளை கிடைக்கும். நல்ல தூக்கம் இல்லாதவர்களும் இந்த Ice Bath எடுத்துக் கொள்ளும்போது நல்ல தூக்கம் வரும். ஆனால் நீங்கள் ஐஸ் குளியல் எடுக்கும்போது உங்களுக்கு தீவிர நடுக்கம் தலைசுற்றல் அசௌகரியம் இருந்தால் உடனே நீரிலிருந்து வெளியே வந்து விட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…