பொங்கலுக்கு அடுத்தபடியாக குடியரசு தினத்தன்று மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் அன்று ரிலீஸ் ஆக உள்ள படங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
குட் நைட், லவ்வர் என கடந்த இரண்டு வருடங்களாக அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்த மணிகண்டன் அடுத்ததாக ஹீரோவாக நடித்த படம் குடும்பஸ்தன். இந்த படத்தை ராஜேஸ்வரி காளி சாமி இயக்கி உள்ளார். இந்த படம் ஜனவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.
ஷங்கர் தயாள் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் குழந்தைகள் முன்னேற்ற கழகம். இந்த படத்தை ஜனவரி 24 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது .
பா.ரஞ்சத்தின் நீலம் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் பாட்டல் ராதா. இந்த திரைப்படம் சிவலிங்கம் இயக்கியுள்ளார். இப்படத்தில் குரு சோமசுந்தரம், ஜான்விஜய் சஞ்சனா நடராஜ் ஆகியோர் நடித்த ஜனவரி 24ஆம் தேதி வெளியாகிறது.
யுடியூபர் ஹரி பாஸ்கர் அறிமுகமாக படம் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங். இந்த படத்தை அருண் ரவிந்திரன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் ஹரி பாஸ்கருக்கு ஜோடியாக பிக் பாஸ் லாஸ்லியா நடித்துள்ளார். இந்த படமும் ஜனவரி 24ஆம் தேதி வெளியாகிறது.
ஜனவரி 24ஆம் தேதி சுந்தர் சி ஹீரோவாக நடித்த வல்லான் திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தை மணி சேயான் இயக்கி உள்ளார். இது ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது .
ஜி கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பூர்வீகம். இந்த படத்தில் போஸ் வெங்கட், இளவரசு போன்றவரும் நடித்துள்ளார்கள் இந்த படத்திற்கு சாணக்கியன் இசை அமைத்துள்ளார் . இந்த படமும் ஜனவரி 24 இல் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…