Categories: சினிமா

500 கோடி மொத்த பட்ஜெட்… 4 பாடல்களுக்கு மட்டும் 75 கோடி…. 2025 இன் முதல் Box Office தோல்வி படம் இதுதான்…

Spread the love

சினிமாவில் எப்போதும் மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கும். நாம் நினைப்பது நடக்காது. எந்த படம் ஓடாது என்று நினைப்போமோ அந்த படம் ஓடிவிடும். எந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறதோ அது ஓடாமல் போய்விடும். எல்லாமே மக்களின் கைகளில் தான் இருக்கிறது. மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப படத்தை எடுத்தால் ஓடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதற்கு சிறந்த உதாரணம் தான் சமீபத்தில் பொங்கலுக்கு வெளியான மதகஜராஜா திரைப்படம்.

12 வருடங்களுக்கு முன்னால் எடுக்கப்பட்டு சில பல காரணங்களால் இத்தனை வருடங்கள் தள்ளி போய் தற்போது தான் வெளியாகியிருக்கிறது. வெளியானது மட்டுமல்லாமல் மக்கள் அனைவரையும் சிரிக்க வைத்து வசூலிலும் சாதனை படைத்து கொண்டு இருக்கிறது. 2025 ஆம் ஆண்டில் முதல் பிளாக்பஸ்டர் படம் என்றால் அது மதகஜராஜா தான். 15 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டு தற்போது 45 கோடியை தாண்டி வசூலித்துக் கொண்டிருக்கிறது.

அதே போல் ங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் படத்திற்கும் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஏனென்றால் ஷங்கர் ஏற்கனவே பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் பெற்றவர். இவரது படங்களில் பாடல்களுக்கு என்றே பிரத்தியேகமாக செட் அமைத்து பல கோடிகளில் செலவழித்து எடுப்பவர். அந்த வகையில் இந்த கேம் சேஞ்சர் படத்தை 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கி இருக்கிறார் ஷங்கர். இதில் நான்கு பாடல்களுக்கு மட்டுமே 75 கோடி செலவழித்துள்ளார் ங்கர்.

இந்த படத்திற்கு மிகுந்த ஹைப் ஏற்றி விளம்பரபடுத்தி வந்தனர் படக் குழுவினர். ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கேம் சேன்ஜர் திரைப்படம் தற்போது வசூலில் 200 கோடியை கூட தொடவில்லை. சில திரையரங்குகளில் இந்த படத்தை கூட ரத்து செய்து விட்டார்களாம். அதனால் இந்த 2025 ஆம் ஆண்டின் முதல் பிளாக்பஸ்டர் தோல்வி படம் அது என்றால் அது கேம் சேஞ்சர் தான் என்று சினிமா ரசிகர்கள் பேசி வருகின்றார்கள்.

admin

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

42 minutes ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

55 minutes ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

1 மணத்தியாலம் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

2 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

2 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

2 மணத்தியாலங்கள் ago