நமக்கு பிடித்த ஆடையில் எண்ணெய் கறை படிந்தால் கவலை வேண்டாம். அதை எப்படி நீக்குவது என்பதை பார்ப்போம்,
வெல்கம் பவுடர் அல்லது பேபி பவுடர்
இந்த முறையை நீங்கள் எண்ணெய் படிந்த உடனே செய்ய வேண்டும், இல்லையென்றால் ஒர்க் அவுட் ஆகாது. எண்ணெய் படிந்தவுடன், கை நிறைய டால்கம் பவுடரை எடுத்து எண்ணெய் படிந்த இடத்தில் போடவும். 5 நிமிடங்களுக்குப் பின், ஆடையில் உள்ள எண்ணெய் கறையை அது உறிஞ்சி எடுத்து விடும். விரல்களால் லேசாக பவுடரை தேய்த்துக் கொடுத்தால், மீதமுள்ள எண்ணையும் நீங்கிவிடும். மேலும் கரை இருப்பது போல் தோன்றினால், அது ஒரு முறை வாஷ் செய்த உடனே நீங்கிவிடும். அதிகமாக கறை இருந்தால் டால்கம் பவுடரை கொட்டி, நன்கு தேய்த்து விட்ட பின், லிக்விட் சோப்பை ஊற்றி அரை மணி நேரம் ஊர விடுங்கள். பின் வீட்டில் உள்ள பழைய டூத் பிரஷ்யை எடுத்து, கறை படிந்த இடத்தில் நன்கு ஸ்கிரப் செய்தால், ஆடையில் ஆழமாக சென்ற கறை கூட நீங்கிவிடும்.
பேக்கிங் சோடா, லெமன் ஜூஸ்
கறை படிந்த ஆடையை, ஒரு மேஜை மீது விரித்து வைத்து, அதில் 2 ஸ்பூன் பேக்கிங் சோடாவை போட்டு, அதன் மேல் லெமன் ஜூசை பிழிந்து விட வேண்டும். நன்கு நுரை பொங்கி வரும் பொழுது, டூத் பிரஸ் கொண்டு தேத்து, இரண்டு முறை தண்ணீரில் அலசினால் ஆயில் கறை இருந்தயிடம் தெரியாமல் போய்விடும். எவ்வளவு விடாப்படியான கரையாக இருந்தாலும், இவ்விரண்டு முறையிலும் நீக்கிவிடலாம். மேலும் கரை நீங்க வில்லை என்றால், ஆயில் ஸ்டெயின் ரிமூவர் கடைகளில் கிடைக்கும். அவற்றை பயன்படுத்தினால் கடினமான கறைகள் கூட நீங்கும்.
