ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வு திருமணம். சரியான வயதில் புரிந்துகொண்டு வாழக்கூடிய நல்ல வாழ்க்கை துணையுடன் திருமணம் அமைவது மிக முக்கியம். இதுதான் நம் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கூட்டி செல்லும். ஆனாலும் ஒரு சிலருக்கு திருமண வயது எட்டிய போதும் ஜாதகத்தில் ஏதாவது தோஷம் இருந்தாலோ சிலருக்கு எல்லாம் சரியாக இருந்தாலும் கூட திருமணம் தடைபட்டுக் கொண்டே இருக்கும். அப்படி திருமணம் தடைபடுபவர்கள் எந்த வழிபாட்டை செய்தால் திருமணம் கைகூடும் என்பதை இனி காண்போம்.
திருமணம் தாமதமாகும் போது மிக உகந்த பரிகாரமாக முதலில் சொல்லப்படுவது யாராலும் ஒரு ஏழை பெண்ணிற்கு திருமணத்திற்கு உதவலாம். நிதி உதவியாக அல்லது பொருள் உதவியாக செய்யும்போது திருமண தடை விலகும். சனி தோஷத்தினால் திருமணத்தடை ஏற்படுபவர்களுக்கு தோஷத்திலிருந்து நிவர்த்தி பெற தான தர்மங்கள் நற்செயல்களை செய்தால் தோஷம் விலகும்.
திருமணத்தடை நீங்க விரைவில் திருமணம் நடைபெற ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவது சிறப்பு. பெண்கள் திருமண தடையை போக்க 16 திங்கட்கிழமைகளில் விரதம் இருந்து சிவபெருமானை வணங்க வேண்டும். வாயில்லா பிராணிகளுக்கு உணவு கொடுப்பது திருமண தடை விலக சிறந்த பரிகாரமாக பார்க்கப்படுகிறது.
திருமண யோகத்தை வழங்கக் கூடியவர் குரு பகவான். அதனால் திருமண தடை நீங்க விரும்புபவர்கள் மஞ்சள் நிற உடையை அணிந்து திங்கட்கிழமைகளில் சிவன் கோயிலுக்கு சென்று வழிபடலாம். குருவுக்கு உகந்த நாளான வியாழக்கிழமைகளிலும் மஞ்சள் நிற ஆடையை அணியலாம். திருமணம் விரைவில் நடக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அரச மரத்துக்கு அடியில் இருக்கும் விநாயகரை காலை 6:00 மணி முதல் ஒன்பது மணிக்குள்ளாக நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடும்.