போடு ரகிட ரகிட…. இதை செய்தால் ரூ.1 லட்சம் பரிசு.. CM விஜய் அறிவித்தார்…. தமிழக மக்களுக்கு குட் நியூஸ்…!

By Nanthini on வைகாசி 20, 2026

Spread the love

தமிழக அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் நோக்கில், ஊழலுக்கு எதிராக முதலமைச்சர் விஜய் அதிரடி நடவடிக்கை ஒன்றை அறிவித்துள்ளார். எந்தவொரு அரசுத் துறையாக இருந்தாலும், பொதுமக்களிடம் வெறும் ₹1,000 லஞ்சம் கேட்டால்கூட, அதுகுறித்த உரிய ஆதாரத்துடன் 1064 என்ற எண்ணில் தாராளமாகப் புகார் தெரிவிக்கலாம் என்றும், அவ்வாறு லஞ்சப் புகாரை ஆதாரத்துடன் சமர்ப்பிக்கும் அனைவருக்கும் தலா ₹1,00,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்களின் லஞ்ச ஒழிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், நேர்மையான நிர்வாகத்தை உறுதிப்படுத்தவும் கொண்டுவரப்பட்டுள்ள இந்த அதிரடித் திட்டம் குறித்த தகவலைப் பொதுமக்கள் அனைவரும் மற்றவர்களுக்கும் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.