Chat GPT என்பது ஒரு சாட்பாட். இந்த chatbot என்பது ஆன்லைன் அரட்டை உரையாடல் சாப்ட்வேர் அப்ளிகேஷன். பெரும்பாலும் இதனை வங்கி சார்ந்த வெப்சைட்டுகளில் அதிகம் பார்க்கலாம். Chat GPT யை சான்பிரான்சிஸ்கோவை சேர்ந்த “ஓபன் AI” என்ற நிறுவனம் உருவாக்கியது. இதுவும் மற்றொரு தேடு பொறி தானே என்று நாம் அவ்வளவு எளிதாக இதை கடந்து சென்று விட முடியாது. இது அதற்கும் மேலானது. இதனை பயன்படுத்தும் மக்களுடைய எண்ணிக்கையானது நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது.
இதனுடைய வரவால் கூகுள் தேடு பொறி உட்பட தற்போது பயன்பாட்டில் உள்ள இன்னும் பிற தொழில்நுட்பங்கள் பயன்பாடுகள் காணாமல் போகுமா? என்று உலக மக்கள் பேசி வருகின்றனர். இந்நிலையில் openAI தலைமை நிர்வாக இயக்குனர் சாம் ஆல்ட்மேன் ChatGPT-இடம் முக்கியமான தனிப்பட்ட தரவுகளை பகிர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது மிகவும் முக்கியமான தனிப்பட்ட தரவுகளை ChatGPT-யிடம் பயனர்கள் தெரிவிக்கிறார்கள். தனிநபர் மீதான வழக்கு விசாரணைக்கு அந்த பயனரின் CHAT தரவுகளை போலீசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பதையும் மறந்து விட வேண்டாம் என்று கூறியுள்ளார்.
