ஹைதராபாத்தில் கணவன் மற்றும் மாமியாரின் தொடர் மன உளைச்சலாலும், வயிற்றில் வளரும் குழந்தைக்கு டிஎன்ஏ (DNA) பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கொடூரமான சந்தேகத்தாலும், 23 வயதான சுஷ்மிதா என்ற ஐந்து மாத கர்ப்பிணிப் பெண் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 25 ஆம் தேதி மேடக் மாவட்டம், கடிபெத்தபூர் கிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் சுஷ்மிதா சடலமாக மீட்கப்பட்டார். இந்தத் துயரச் சம்பவத்தையடுத்து, தற்கொலைக்குத் தூண்டியதாக சுஷ்மிதாவின் கணவர் அபிலாஷ் மற்றும் அவரது தாயார் லட்சுமி ஆகிய இருவரையும் அல்லாதுர்க் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்துள்ளனர்.
வளையல் வியாபாரியான அபிலாஷுக்கும் சுஷ்மிதாவிற்கும் திருமணமாகி 18 மாதங்களே ஆன நிலையில், ஆரம்பத்திலிருந்தே சுஷ்மிதா உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையான வரதட்சணை மற்றும் குடும்பத் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஜூன் 23 அன்று சுஷ்மிதாவின் வளைகாப்பு விழா ஏற்பாடுகள் குறித்துப் பேசுவதற்காக அவரது பெற்றோர் மகளின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது, குடும்பத்தினர் மற்றும் பெரியவர்கள் முன்னிலையில் வளைகாப்பு விழாவை நிராகரித்த அபிலாஷ், சுஷ்மிதாவின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறி அநாகரிகமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பெரியவர்கள் முன்னிலையில் தன் கற்பின் மீது சுமத்தப்பட்ட இந்த அபாண்டமான பழியும், கணவனின் கொடூரமான சந்தேகமும் சுஷ்மிதாவை ஆழமான மன அதிர்ச்சிக்கும் அவமானத்திற்கும் உள்ளாக்கியுள்ளது. இந்தத் தீவிர மன உளைச்சலைத் தாங்க முடியாமல், அவர் தனது வாழ்வை முடித்துக் கொள்ளும் விபரீத முடிவை எடுத்துள்ளார். தற்போது பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சுஷ்மிதாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு பெண்ணின் உயிரையும் அவளது வயிற்றில் வளர்ந்த பச்சைக் குழந்தையையும் பலி வாங்கிய குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அவளது குடும்பத்தினர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள வூஸ்டர் நகரில் செயல்பட்டு வரும் எகானோ லாட்ஜ் என்ற மோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ…
இந்திய கிரிக்கெட் வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் பயணத்தின் போது 'பென் ஃபைட்' விளையாடும் வீடியோ…
நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், தலைமைச் செயல் அதிகாரிகள் அல்லது அரசு அதிகாரிகளின் வாட்ஸ்அப் சுயவிவரப் படம் மற்றும் பெயரைப் பயன்படுத்தி,…
மும்பை சாந்தீவலி பகுதியில் பெய்த கனமழையின் போது, திறந்திருந்த பாதாள சாக்கடை மேன்ஹோலில் தவறி விழுந்து அஸ்லாம் இசாக் ஷேக்…
தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் நடத்தப்பட்ட ரூ.35 கோடி குதிரை…
தமிழக அரசியல் களம் எப்போதும் திமுக, அதிமுக என்ற இரு துருவங்களை மையமாகக்கொண்டே சுழன்று வந்துள்ளது. அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்.,…