தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களத்தில் எதிர்பாராத அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அரை நூற்றாண்டு கால அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததும், ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம் போன்றோர் தி.மு.க-வில் இணைந்ததும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தது மிகப்பெரிய அரசியல் திருப்பமாகக் கருதப்படுகிறது. மேலும், சேலம் மாவட்டத்தில் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க முன்னாள் அமைச்சர் செம்மலையைத் தங்கள் பக்கம் இழுக்க அமைச்சர் எ.வ.வேலு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
வன்னியர் சமூகத்தில் செல்வாக்கு கொண்ட செம்மலை தி.மு.க-விற்கு வந்தால், மேட்டூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரத் தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகும் என்பது அக்கட்சியின் கணக்காக உள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளிக்க மறுத்த செம்மலைக்கு, கடந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சின்ச்வாட் பகுதியில், பெண் ஒருவர் தான் வாங்கிய புதிய பெட்சீட்டில் 'மேட் இன் பாகிஸ்தான்'…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் ஆளுங்கட்சியான திமுகவிற்குப் பலத்த பின்னடைவு ஏற்படும் வகையில், அக்கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள்…
நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த விவாகரத்து வழக்கு…
உத்தரப் பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் (Kasganj) பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக அண்ணிக்கும் அவரது நாத்தனாருக்கும் இடையே ஏற்பட்ட சாதாரண…
2026 நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்குப் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தனது…
திறன் பயிற்சியில் தேர்ச்சி பெறுவோருக்கு மட்டுமே தனது கட்சியில் பதவி வழங்க கே. அண்ணாமலை முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.…