திருநெல்வேலியில் பல நிகழ்ச்சிக்கு வருகை தந்த பெங்களூரு புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். விஜய் மாநாடு எழுச்சி ஏற்படுத்தியது. விஜய் தான் ஆட்சிக்கு வருவார் என்று இளைஞர்கள் உறுதி கொடுத்து வருகிறார்கள். தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் சென்றால் மட்டுமே அவருக்கு ஆதரவு அதிகரிக்கும். எடப்பாடி பழனிச்சாமி என்னுடைய முதுகில் குத்தி விட்டார் என்று தேமுதிக பொதுசெயலாளர் கூறி வருகிறார். இதை நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன் இருப்பினும் அவர்கள் எம்.பி பதவிக்கு ஆசைப்பட்டு இத்தனை ஆண்டுகள் அவருடன் பயணித்துள்ளார்கள். தேமுதிக வெளியேறிய நிலையில் அமமுகவை வெளியேற்றி விடுவார்கள்.
ஜெயலலிதா, எம்ஜிஆர், விஜயகாந்த் போன்ற அரசியல் தலைவர்களுக்கு தானாகவே கூட்டம் கூடியது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி காசை கொடுத்து கூட்டத்தை சேர்க்கிறார். அண்ணாமலை மற்றும் எடப்பாடி பழனிச்சாமிகும் எப்பவும் ஒட்டவே ஒட்டாது. அதிமுகவில் இருந்து நிறைய பேர் வெளியேறி விட்டார்கள்.அதிமுக இப்படியே போனா 4வது இடத்தை கூட பிடிக்க முடியாது. இது திமுகவுக்கு சாதகமாக ஆகிவிட்டது. கண்டிப்பாக இந்த நிலை நீடித்தால் திமுக வெற்றி பெறும். சீமானுடன் தான் எடப்பாடி பழனிச்சாமிக்கு போட்டி. டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டத்தில் இருந்து வெளியேறி தவெக அணியில் சேர நினைக்கிறார். அதிமுகவின் சின்னம் தொடர்பான வழக்கு ஜனவரி மாதம் விசாரணைக்கு வரவுள்ளது. அதிமுகவின் இரட்டை இலை இப்போது ஆட்டத்தில் உள்ளது என்று தெரிவித்தார்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பாதுகாப்பதிலும், அங்கு நடைபெறும் முறைகேடுகளைத் தடுப்பதிலும் தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் பகுதியில் செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏடிஎம் மையத்தில் நள்ளிரவில் புகுந்து திருட முயன்ற…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7…
பொதுவாக மாமனார் - மருமகன் உறவு என்றாலே மனக்கசப்புகள் அதிகம் பேசப்படும் சூழலில், தனக்கு வாழ்வளித்த மாமனாருக்கு ரூ.1.5 கோடி…
தமிழ்நாட்டில் கல்வி விருது வழங்கும் விழாக்களும், அதில் பின்பற்றப்படும் நடைமுறைகளும் எப்போதும் சமூக அளவில் பெரும் விவாதப் பொருளாகவே இருந்து…
பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பில் சமரசம் செய்து சான்றிதழ் வழங்குவதற்காக, கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பல லட்சக் கணக்கில் பண வசூல்…