சிபிஐ கையில் இருக்கும் வழக்கை கையில் எடுத்த திமுக.. அடுத்த விக்கெட் இவர்தானா?…. ஆதவ் அர்ஜுனாவின் ஒற்றை பேச்சால் ஆடிப்போன தமிழக அரசியல்…..!

By Nanthini on ஆடி 3, 2026

Spread the love

கரூர் மரணங்கள் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தை நாட திமுக தலைமை தீவிரமாக முடிவெடுத்துள்ளது. கரூரில் நிகழ்ந்த மரணங்கள் தொடர்பான வழக்கு தற்போது சிபிஐ வசம் இருக்கும் நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜுனா, தனது மகன் உதயநிதி ஸ்டாலினின் அரசியல் எதிர்காலத்திற்காகவே ஸ்டாலின் காவல்துறை மூலம் கரூர் மக்களை கொன்று குவித்ததாக மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், ஆதாரமற்ற முறையிலும் பேசப்பட்ட இந்த பேச்சுக்கு திமுக தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளதோடு, நீதிமன்ற அவமதிப்பு மற்றும் அவதூறு பரப்பியதற்காக ஆதவ் அர்ஜுனா மீது உரிய சட்டப்படியான நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர திமுக தற்பொழுது சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து அடுத்தகட்ட பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.