தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றன. அதேசமயம் தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக இந்த முறை கட்டாயம் ஆட்சியை பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. இதற்காக பல வியூகங்களை வகுத்து வரும் ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியிலும் தீவிரம் காட்டி வருகிறார்.
இப்படியான நிலையில் தனித்தொகுதியில் திமுக வேட்பாளருக்கு இதரஜாதியினர் ஓட்டு போடுவதில்லை என்ற பேச்சு உள்ளது. அதனால்தான் கடந்த தேர்தலில் கூட்டணி வலுவாக இருந்தும் தனித் தொகுதிகளில் திமுகவை விட அதிமுக அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றது. குறிப்பாக பொன்னேரி, வாசுதேவநல்லூர் மற்றும் அவிநாசி உள்ளிட்ட பல தனி தொகுதிகளில் நீண்ட காலமாக திமுக போட்டியிடவில்லை. தற்போது தனித் தொகுதிகளில் கவனம் செலுத்த திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
