நம்பியவர்களுக்கெல்லாம் துரோகம்… “பதவி ஆசையால் மூளை மழுங்கிவிட்டது” காங்கிரஸை சாடிய திமுக..!!

By Soundarya on வைகாசி 23, 2026

Spread the love

திமுக இளைஞரணி நிர்வாகக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கடுமையான கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சொந்த உழைப்பில் வெற்றி பெற முடியாமல், தங்களை நம்பியவர்களுக்கெல்லாம் துரோகம் இழைக்கும் அறமில்லாத ஒரு கட்சியாக காங்கிரஸ் மாறிவிட்டது என்று அந்த தீர்மானத்தில் மிகக் காட்டமாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

மேலும், காங்கிரஸ் போன்ற ஒரு பழம்பெரும் பேரியக்கம் அரசியலின் அடிப்படை நாகரிகத்தைக் கூட கடைப்பிடிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்று திமுக இளைஞரணி சுட்டிக்காட்டியுள்ளது. பதவி ஆசை அவர்களின் மூளையை மழுங்கடித்துவிட்டதாகக் குறிப்பிட்டு, அக்கட்சியின் தற்போதைய அரசியல் செயல்பாடுகளுக்கு கூட்டத்தில் பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.