தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியான எடப்பாடியில் அவருக்கு கடும் சவாலை ஏற்படுத்த திமுக மற்றும் பாமகவின் ஒரு பிரிவு தீவிரமாகத் திட்டமிட்டு வருகின்றன. கடந்த தேர்தல்களில் கொங்கு மண்டலத்தில் அதிமுக பலமாக இருந்த நிலையில், இந்த முறை அங்கு விரிசலை ஏற்படுத்த ஆளுங்கட்சியான திமுக வியூகங்களை வகுத்து வருகிறது.
எடப்பாடி தொகுதியில் கணிசமாக உள்ள வன்னியர் சமூக வாக்குகளைக் கவரும் வகையில், திமுக சார்பில் பலமான வேட்பாளரை நிறுத்த அக்கட்சி தலைமை ஆலோசித்து வருகிறது. தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் செல்வகணபதி அல்லது சம்பத் ஆகியோரில் ஒருவரை எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் களம் இறக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதன் மூலம் அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் எடப்பாடியில் நேரடிப் போட்டியை பலப்படுத்த திமுக முயல்கிறது.
மறுபுறம், பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக அணி அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், ராமதாஸ் தனது ஆதரவாளர்களுடன் தனித்துப் போட்டியிடப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் தனி வேட்பாளர்களை நிறுத்த ராமதாஸ் திட்டமிட்டுள்ளதால், வன்னியர் சமூக வாக்குகள் சிதறும் நிலை உருவாகியுள்ளது.
ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகிய இரு பிரிவினரும் தனித்தனியாகச் செயல்படுவது அதிமுகவின் வாக்கு வங்கியில் பெரும் சரிவை ஏற்படுத்தும் எனக் கணிக்கப்படுகிறது. வன்னியர் வாக்குகள் பிரிவது திமுக வேட்பாளருக்குச் சாதகமாக அமையக்கூடும் என்பதால், எடப்பாடி தொகுதியில் இந்த முறை மும்முனைப் போட்டி நிலவுவதுடன், எடப்பாடி பழனிசாமிக்கு இது ஒரு கடினமான அரசியல் போராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…