தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதையொட்டி பல்வேறு கட்சிகளும் தங்கள் பலத்தை நிரூபிக்க புதிய உறுப்பினர்களை இணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், பழம்பெரும் நடிகை லதா இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் (அதிமுக) அதிகாரப்பூர்வமாக இணைந்தார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த அவர், தன்னை கட்சியின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.
இந்த சந்திப்பின் போது, நடிகை லதாவுக்கு எடப்பாடி பழனிசாமி பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்ததுடன், அவருக்கான கட்சி உறுப்பினர் அட்டையையும் வழங்கினார். எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே திரையுலகில் புகழ்பெற்ற லதா, தற்போது அதிமுகவில் இணைந்துள்ள நிகழ்வு அக்கட்சித் தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எம்ஜிஆர் கட்சித் தொடங்கிய போதே 3-வது பெண் உறுப்பினராக அதிமுகவில் இணைந்தவர். ஜெ., மறைவுக்குப்பின் அதிமுக இரண்டாக உடைந்தபோது, கட்சியில் ஒதுங்கி இருந்தார். நல்ல பேச்சாற்றல் கொண்ட அவரை, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மாநிலம் முழுவதும் தேர்தல் பரப்புரையை மேற்கொள்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது.. தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வரும் அதிமுகவுக்கு, திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்களின் வருகை கூடுதல் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கான்பூரில் நடைபெற்ற ஒரு கிட்டி பார்ட்டி, எதிர்பாராதவிதமாக ஒரு கொடூரமான கொலைத் திட்டத்திற்கான மறைப்பாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.…
கல்லூரி படிப்பின் போது டெலிகிராம் சமூக வலைதளத்தில் வெறும் 300 மாணவர்களுடன் சிறிய முயற்சியாகத் தொடங்கப்பட்ட 'டெல்டா எஜுகேஷன்' இன்று…
கர்நாடக மாநிலம் தொட்டபள்ளாப்பூரில் உள்ள விடுதி ஒன்றில், 23 வயதான வித்யா என்ற பெண் அவரது கணவர் ஆனந்தால் ஐடி…
ஒடிசா மாநிலம் பாலங்கீர் மாவட்டம் தேபதமுண்டா கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் கார்செல் (45) கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரெனக்…
பெங்களூரில் வியாழக்கிழமை காலை 9.15 மணியளவில் 26 வயதான மதுமிதா என்ற செவிலியர் மீது அவரது கணவர் வெங்கடேஷ் என்பவர்…
உத்தரப்பிரதேச மாநிலம் புலந்தஷஹர் மாவட்டத்தில், 51 ஆண்டுகள் தம்பதியாக வாழ்ந்த 70 வயது மூதாட்டிக்கும் 75 வயது முதியவருக்கும் இடையே…