தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள முதல்வர் ஸ்டாலின் தனது கூட்டணியோடு சேர்ந்து தயாராகி வருகின்றார். திமுகவின் கூட்டணி பலமாக இருப்பதால் எப்படியும் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார். அதே சமயம் கட்சியிலும் பல மாற்றங்கள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே அமைச்சர் நேரு தொடர்புடைய இடங்களில் ED நடத்திய ரெய்டில் அரசுத் துறையில் கோடி கணக்கில் மோசடி நடந்திருப்பதாக தகவல் வெளியானது. இதனால் அரசியல் தலைவர்கள் அட்டாக் மோடில் இறங்கியதால் அறிவாலயம் அதிர்ந்து போனது.
தற்போது ED ஹிட் லிஸ்டில் மேலும் பல அமைச்சர்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர்கள் எ.வ. வேலு, சேகர் பாபு, சக்கரபாணி, மூர்த்தி மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோர் ED ரேடாரில் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் அடுத்தடுத்து சிக்கினால் அடுத்த ஆண்டு தேர்தலை திமுக எதிர்கொள்வதில் மிகப்பெரிய சிக்கல் ஆகிவிடும் என்ற அச்சத்தில் முதல்வர் ஸ்டாலின் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
